தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 oktober 2014

ஈ பேயில் விரலை விட்டு ஆட்டிய நபர் இவர் தான் !

பலர் கள்ள கிரெடிட் காட்டை பாவித்து பொருட்களை வாங்குவார்கள், சிலர் பணத்தை கூட எடுப்பார்கள். மேலும் சிலர் கள்ள கிரெடிட் காட்டை விற்கிறார்கள். ஆனால் நீங்கள் படத்தில் பார்கும் நபர், அதுக்கும் மேல .... அதாவது கள்ள கிரெடிட் காட்டை செய்யும் மெசினை வைத்திருக்கவில்லை. அதனையே தயாரித்து விற்றுள்ளார். சும்மா தனக்கு தெரிந்த சில நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு அல்ல. முகமே தெரியாத நபர்களுக்கு விற்று காசு பெற்றுள்ளார். ஈ- பேயில் கடிகாரம் விற்பார்கள் சிலர் காரையும் விற்பார்கள். ஆனால் இவர் ஈ-பேயில் போட்டு வித்த பொருளே கள்ள கிரெடிட் காட் தயாரிக்கும் எந்திரம் தான்.
இதில் படு வேடிக்கையான விடையம் என்னவென்றால், இவரிடம் யாரவது இந்த இயந்திரத்தை வாங்கினால் அதனை எவ்வாறு இயக்குவது ? என்ன செய்யவேண்டும் எப்படிச் செய்யவேண்டும் என்பது தொடர்பாக ஒரு காட்-லாக்கையே இவர் கொடுப்பது வழக்கமாம். அதாவது கள்ள காட்டை எப்படி தயாரிப்பது என்று இவர் ஒரு புத்தகத்தையே எழுதி இருக்கிறார். ஹபிபூர் என்னும் 27 வயது நபரே இவ்வாறு பொலிசாரிடம் சிக்கிக்கொண்டுள்ளார். பல காலமாக ஈ-பேயில் இவர் கள்ள காட்டை தயாரிக்கும் இயந்திரத்தை விற்பனை செய்து வந்துள்ளார். அனால் எவரும் இவரை காட்டிக்கொடுக்கவில்லை.
சிறிய நெருப்பு பெட்டி சைசில் உள்ள இந்த இயந்திரத்தை 765 பவுன்சுக்கு இவர் விற்றுள்ளார். அதனை வாங்கும் நபர்கள், அதனை ஏ.ரி.எம் இயந்திரத்தின் முன்னால் ஒட்டிவிட்டால் போதும். அது பாவனையாளர் இலக்கத்தை மேலும் பாஸ்வேட்டையும் அறிந்து அருகில் உள்ள கணணிக்கு கொடுக்கும். காரில் உட்கார்ந்தபடியே இவை அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதனைக் கொண்டு கள்ள கிரெடிட் காட்டை தயாரிக்கமுடியும். அத்தோடு அதனை தயாரிக்கும் விதத்தையும் இவரே புத்தகமாக எழுதி அனுப்பியும் விடுவாராம். என்ன ஒரு சர்விஸ் பார்த்தீர்களா ?
http://www.athirvu.com/newsdetail/1151.html

Geen opmerkingen:

Een reactie posten