தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 oktober 2014

மொறிசன் சூப்பர் மார்கெட்டில் வேலைசெய்த நபர் இயக்கத்தி: டேவிட் கமரூனுக்கு சவால் !


லண்டனில் உள்ள மொறிசன் சூப்பர் மார்கெட்டில் வேலைசெய்த முஸ்லீம் நபர் ஒருவர், பிரித்தானிய பிரதமருக்கு நேரடியா சவால் விடுத்துள்ளார். ISIS தீவிரவாதிகள் இயக்கத்தி சேர இவர் மொறிசன் சூப்பர் மார்கெட்டில் வேலையை ராஜினாமச் செய்துவிட்டு சிரியா சென்றுள்ளார். அங்கே பயிற்சிகளை எடுத்துவிட்டு தற்போது ஈராக் நாட்டில் உள்ளார். வான் தாக்குதல் இருக்கட்டும் முடிந்தால் தரை துருப்புகளை அனுப்பிப் பாருங்கள், என்ன நடக்கிறது என்று தெரியும். எங்களிடம் போர் விமானங்கள் இல்லை. உங்கள் தரைப் படையை முடிந்தால் அனுப்பிப்பாருங்கள் என்று நேரடி சவால் விடுத்துள்ளார்.
மிகவும் ஆவேசமாக பேசும் இவரின் காணொளி இன்ரர் நெட்டில் வெளியாகி சில மணி நேரங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளது என்கிறார்கள். இதனை பிரித்தானிய பத்திரிகைகள் கூட தூக்கிப் பிடித்து செய்தியாகப் போட்டு உள்ளார்கள். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் , ஈராக்கில் உள்ள ISIS தீவிரவாதிகளை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிப் பேசி அந்த வீடியோ வெளியாகி சில மணித்தியாலங்களில் இந்த சவால் வீடியோ வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடையம் தான் போங்கள் !

Geen opmerkingen:

Een reactie posten