நேற்றைய தினம் அவர்கள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் வாசல்ஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதிக்கு முன்னதாக் பாரிய அளவில் திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் கத்தி மற்றும் கோடரி போன்ற பொருட்களை எடுத்துவந்து, 2 முஸ்லீம்களை வெட்டுவது போல பாசாங்கு செய்தார்கள். மிகவும் நேர்த்தியாக செய்யபப்ட்ட இக் காரியத்தைப் பார்த்த பலர் மிரண்டுபோனார்கள். பொலிசாரும் அதிர்சிக்கு உள்ளாகி பின்னர், சுதாரித்துக்கொண்டார்கள். வெறும் பாசாங்கு காட்டவும் மக்களை விழிப்புணர்வுக்கு கொண்டுவரவுமே இவ்வாறு தாம் செய்ததாக குருதிஷ் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் நேற்று நடந்த விடையத்தைப் படித்த பல முஸ்லீம் அமைப்பினர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள். இப்படி ஒரு ஆர்பாட்டத்தை செய்வது முறையல்ல என்று அவர்கள் தெரிவித்துள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இதேவேளை குருதிஷ் இன மக்கள் ஈழத் தமிழர்கள் நடாத்தும் பல போராட்டங்களில் பங்கு எடுப்பவர்கள். அந்த இனத்தில் உள்ள பல தலைவர்கள் ஈழத் தமிழர்கள் லண்டனில் நடாத்தும் போராட்டங்களில் கல்ந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்து வந்துள்ளார்கள். ஆனால் நேற்று அவர்கள் நடத்தி போராட்டத்தில் ஒரு தமிழர் கூட கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1149.html
Geen opmerkingen:
Een reactie posten