2016ஆம் ஆண்டுக்கான பல்வகைமை குடியேற்ற அமெரிக்கா வீசா விண்ணப்ப நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த நிகழ்ச்சித்திட்டம் 2014 நவம்பர் 3ஆம் திகதி நிறைவடையவுள்ளது. குறித்த விண்ணப்ப நிகழ்ச்சி திட்டத்தின்போது காகித விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இணையம் மூலமான விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்களை dvlottery.state.gov. என்ற இணைய முகவரியின் மூலம் அனுப்ப முடியும். இறுதிவரை காத்திருக்காமல் முன்கூட்டியே இந்த விண்ணப்பங்களை அனுப்புமாறு ராஜாங்க திணைக்களம் கேட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை பங்களாதேஸ், பிரேசில், கனடா, சீனா, கொலம்பியா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளோர் அனுப்ப முடியாது. கடந்த ஐந்து வருடங்களில் குறித்த நாடுகள் 50,000க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளமை காரணமாகவே இந்த தடவை குறித்த நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. |
Geen opmerkingen:
Een reactie posten