[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 06:26.30 AM GMT ]
குற்றம் சுமத்தப்பட்டுள்ள உறுப்பினர்களில் 44 பேர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்தவர்கள். 36 பேர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள். இரண்டு பேர் ஜே.வி.பியை சேர்ந்தவர்கள் என்பதுடன் 22 பேர் ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப் பகுதியில் இவர்கள் இந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன் 103 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் 57 பேர் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் இந்திக பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXns6.html
கிரிக்கெட் சபையின் பணம் ஜனாதிபதித் தேர்தலுக்கு?
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 06:33.47 AM GMT ]
இது தொடர்பான தகவல்கள் சிங்கள ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
20-டுவெண்டி கிரிக்கட் தொடரின் பின் இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு சுமார் மூன்று கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக பகிர்ந்தளிக்க இலங்கைக் கிரிக்கட் சபை தீர்மானித்திருந்தது.
அதற்கு ஏதுவாக சர்வதேச கிரிக்கட் கவுன்சிலிடம் இருந்து 2.8 மில்லியன் டொலர்கள் இலங்கைக் கிரிக்கட் சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இதுவரை இந்தப் பணம் கிரிக்கட் வீரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது கிரிக்கட் வீரர்களுக்குச் சேர வேண்டிய பணத்தை ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு வழங்க கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் நிஷாந்த ரணதுங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அளுத்கமகே ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
இதன் மூலம் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் தொடர்பான விபரங்களை மூடிமறைத்துக் கொள்ள அவர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் சிங்கள ஊடகங்களின் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARYKXns7.html
பல கட்சி தாவல்கள் விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 07:04.04 AM GMT ]
ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினர் ஒருவர், இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாகாண சபை உறுப்பினர்கள், 6 பிரதேச சபை உறுப்பினர்கள் அண்மையில் அமை்சசர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைவதாக கூறியுள்ளனர்.
இதனிடையே தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான அச்சல ஜாகொட ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய உள்ளதாகவும் வரவு செலவுத் திட்ட விவாத்தின் போது இவர் எதிர்க்கட்சியில் இணைவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவரை தவிர மேலும் சில ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயத்தில் ஆளும் கட்சியின் ஏனைய கூட்டணிக் கட்சிகள் இதுவரை சரியான தீர்மானத்திற்கு வரவில்லை என்றாலும் அவர்கள் சுதந்திரக் கட்சியின் அணியினருடன் இணைய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து கொழும்பு இணையத்தளம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள அமைச்சர் ஒருவர், அரசாங்கத்தில் இருந்து தற்போது வெளியேறினால், அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் விடலாம்.
பதவிக்காலம் முடிவடைந்து நடத்த போகும் ஜனாதிபதித் தேர்தல் இதுவல்ல என்பதே இதற்கு காரணம். எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதியே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 4 ஆண்டு பதவிக்காலம் பூர்த்தியாகிறது. இதன் பின்னர், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதிக்கு தேர்தல் ஒன்றை நடத்த முடியும்.
மூன்றாவது முறையாக மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது சட்டவிரோதம் என்ற போதிலும் எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி வரை அரசாங்கம் காலத்தை எடுத்து கொள்ளும் என்பது தெளிவானது.
அப்போது இருக்கும் நிலைமையின் அடிப்படையிலேயே அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும். அதுவரைக்கும் அரசாங்கத்திற்குள் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனினும் அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் அணி வகுத்து வருவதை பார்த்தால், ஜனாதிபதியினால் அவற்று பதிலளிக்க முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பிரச்சினை, அதிருப்தியடைந்துள்ள அமைச்சர்களின் பிரச்சினை, ஏனைய கட்சிகள் முன்வைக்கு அரசியல் அமைப்பு ரீதியான விடயங்கள், கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியால் பதிலளிக்க முடியாது போகும் எனவும் அந்த அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆரம்பித்தது கட்சித் தாவல்! தொடங்கி வைத்தார் சீலரத்தின தேரர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சி தாவும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கும் அணிமாற பலர் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதே போன்று சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி முக்கியஸ்தர்களும் கட்சி மாறப் போவதாக செய்திகள் கசிந்திருந்தன.
எனினும் கட்சி தாவும் நடவடிக்கைகளை யார், எப்போது ஆரம்பித்து வைப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. அதோ அவர், இதோ இவர் என்று கைகாட்டப்பட்ட பலரும் இதுவரை கட்சி தாவும் தீர்மானம் குறித்து வாயே திறக்கவில்லை.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பொன்சேகா கட்சியின் முக்கியஸ்தர் பலாங்கொடை சீலரத்தின தேரர் கட்சி தாவும் அதிரடியாக நடவடிக்கையை நேற்று ஆரம்பித்து வைத்துள்ளார். இவர் அக்கட்சியின் பியகம தொகுதி அமைப்பாளராக கடமையாற்றியிருந்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஆட்டம் முடிந்துவிட்டது, அடக்கி வாசியுங்கள் என்ற தொனியில் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களில் இவரது கட்சித் தாவல் நிகழ்ந்துள்ளது.
சரத் பொன்சேகா அரசியலுக்குத் தகுதியற்றவர் என்றும் ,தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் உணர்ச்சியும், குரோத உணர்வும் கொண்டவர் என்றும் அவர் தனது பதவி விலகலுக்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பலாங்கொடை சீலரத்தின தேரர் இன்று ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதுடன், பொதுபல சேனா அமைப்பின் தேசிய மட்ட பதவியொன்றுக்கும் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnty.html
Geen opmerkingen:
Een reactie posten