இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஈழத்தையும், தமிழக அரசியல் தலைவர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் மறந்து விடுமாறு மோடி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது சுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மோடியின் இந்த அறிவுரையை ஏனைய தமிழ்க்கட்சிகளும் பின்பற்றி இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணமுன் வரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்,
ஏற்கனவே மோடியை சந்திக்க சென்ற தமிழ்தேசியக்கூட்டமைப்பினர், தமிழகத்திலும் பாரதீய ஜனதாக்கட்சியினரை சந்தித்ததும், அதன்பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க வாய்ப்பை வழங்காமையும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnqy.html
Geen opmerkingen:
Een reactie posten