[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 06:51.12 AM GMT ]
அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கையில் அவசரமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், அது பற்றிய வத்திக்கானின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என வத்திகான் வானொலியின் செய்தியாசிரியர் ரொபின் கோமசிடம் சர்வதேச ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது அவர் இதனை கூறியுள்ளார்.
பாப்பரசரின் விஜயம் அரசியல் இலாபத்திற்கான ஒரு சந்தர்ப்பமாக இருக்கக் கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏற்கவே தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் புனித பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வத்திக்கான் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பை விடுப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வத்திகான் சென்றுள்ளார்.
ஜனாதிபதி நேற்று பாப்பரசரை சந்தித்து அழைப்பை கையளித்தார்.
தொடர்புடைய செய்தி- வத்திக்கானில் பாப்பரசரை சந்தித்தார் ஜனாதிபதி மகிந்த
இலங்கை விஜயத்தை ஒத்திவைக்குமாறு பாப்பரசரிடம் கோரிக்கை
புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதன் மூலம் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதாக சுட்டிக்காட்டி நியாயமான சமூகத்திற்கான சடடத்தரணிகள் அமைப்பு பாப்பரசர் முதலாவது பிரான்ஸிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அரசாங்கம் அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தால், பாப்பரசரின் விஜயத்தை ஒத்திவைக்குமாறும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது என அந்த அமைப்பின் ஏற்பாட்டாளரான சட்டத்தரணி சிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஒன்று நடத்தப்படும் தருவாயில் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது கத்தோலிக்க மக்களுக்காக வழங்கும் தேர்தல் இலஞ்சமாக பயன்படுத்தப்படக் கூடும் என்பதையும் அவசரமாக தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் தேர்தல் பிரசாரத்திற்கான காலம் குறைவது என்பவற்றை அடிப்படையாக கொண்டு பாப்பரசரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் லக்திலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVev7.html
கெட்டவார்த்தையால் திட்டிவிடுவேன்! ஊடகவியலாளரை எச்சரித்த அமைச்சர்!
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 06:53.35 AM GMT ]
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
மொனராகலை பிரதேசத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோத புதையல் தோண்டும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அப்பிரதேசத்தின் முக்கிய அமைச்சர் சுமேதா ஜயசேன இவற்றின் பின்னணியில் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சுமேதாவைத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது கடும் எரிச்சலடைந்த அமைச்சர் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளார்.
“தம்பி, என்னிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்காதே. எனக்கு எதிரான செய்திகள் ஊடகங்களின் சதி” என்று கோபமாகப் பதிலளித்த அவர் தொலைபேசியைத் துண்டித்துள்ளார்..
சம்பவம் குறித்து பெரும்பாலான சிங்கள ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து செய்திகளைப் பிரசுரித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszATYKVewy.html
கோட்டை நீதவானுக்கு தூதுவர் பதவி?
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 07:12.25 AM GMT ]
பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் கிறிஸ்நோனிஸ் தனக்கேற்பட்ட அவமானம் காரணமாக தூதுவர் பதவியிலிருந்து ராஜினாமாக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
அவரது ராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக் கொண்டு, அந்த இடத்துக்குப் புதியவர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.
இதனை அடுத்து பிரிட்டனுக்கான புதிய தூதுவராக தற்போது கொழும்பு கோட்டை நீதிவானாக கடமையாற்றும் திலிண கமகேவின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக அலரி மாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரது பெயரை கிறிஸ் நோனிஸைத் தாக்கிய சஜின் வாஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேணுகா செனவிரத்தின் ஆகியோர் கூட்டாகப் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATYKVew0.html
வாஸ்குணவர்த்தன வீட்டை சோதனையிட அனுமதி மறுப்பு
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 07:20.27 AM GMT ]
பம்பலப்பிட்டிய பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் என்பவரின் கொலை தொடர்பில் வாஸ் குணவர்த்தன தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டில் சட்டவிரோத ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அவரது வீட்டை சோதனையிட அனுமதி கேட்டு பொலிசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அவரது வீட்டில் சட்டவிரோத ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அவரது வீட்டை சோதனையிட அனுமதி கேட்டு பொலிசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நேற்று இந்த மனுவின் மீதான விசாரணையின் போது பொலிசாரின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார். முழுவீட்டையும் சோதனை போடுவதற்கு அனுமதியளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அவர், வீட்டின் எந்தப் பகுதியை சோதனை போட வேண்டும் என்பதை குறிப்பாக தெரிவிக்குமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக குற்றவாளியான வாஸ் குணவர்த்தன தரப்பினருக்கு தமது சட்டவிரோத ஆயுதங்களை வேறிடத்துக்கு மாற்றிக் கொள்வதற்கான அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக சட்டத்தரணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVew1.html
பொலிஸாருக்கு சவால் விடும் ஹிருணிகா
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 07:31.09 AM GMT ]
கொலன்னாவ பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்வோர் மற்றும் செய்யும் இடங்கள் பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியும் என குறிப்பிட்டேன்.
யார் விற்பனை செய்கின்றார்கள் என்று ஹிருணிகா சொன்னால், அவர்களை நான் கைது செய்கின்றேன் என்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன.
அப்படியானால் அவர்கள் பொலிஸ் அதிகாரிகளாக இருப்பதில் அர்த்தமில்லை.
நான் அடையாளம் காட்டித் தான் குற்றவாளிகளை பிடிக்க வேண்டுமாயின், நான் பொலிஸ் சீருடை அணிந்து கொள்கின்றேன். அஜித் ரோஹன அரசியல்வாதியாக மாறிக் கொள்ள வேண்டியதுதான்.
பொலிஸாரின் கடமைகளை நாம் செய்தால் அவர்களை விடவும் சிறந்த முறையில் அவற்றைச் செய்வோம்.
பொலிஸார் கடமைகளை சிறந்த முறையில் ஆற்ற வேண்டும். அதற்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாறாக என்னிடம் யார் போதைப் பொருள் விற்பனை செய்கின்றார்கள் என் கேள்வி எழுப்ப வேண்டாம்.
நான் பேதைப் பொருள் விற்பனை செய்யவுமில்லை, விநியோகம் செய்யவுமில்லை என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
அண்மையில், வெல்லம்பிட்டிய சேதவத்த சித்தார்த்த வித்தியாலயத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தவிர்ப்பு நிவாரண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVew2.html
என்னை அரசியலிலிருந்து ஓரம் கட்ட சூழ்ச்சி: மேர்வின் சில்வா
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 07:44.49 AM GMT ]
நேற்று கடவத்தைப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நான் ஒரு ஆண்டும் இரண்டு மாதங்களும் களனி தொகுதி அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தேன்,எனக்கு வெட்கம் என்பது உண்டு.
சேர் டி.பி. ஜயதிலக்கத்தான் களனி தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர், அவர் பிரதமராகக் கூடிய தகுதியைக் கொண்டவர்.
உட்கட்சி சூழ்ச்சித் திட்டங்களினால் அவர் ஓரம் கட்டப்பட்டார்.
சூழ்ச்சித்திட்டமொன்றின் மூலம் இந்தியாவின் உயர்ஸ்தானிகராக பதவி வழங்கப்பட்டது. அதே வேளையை எனக்கும் செய்ய சிலர் முயற்சித்தார்கள்.
எனக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்தார்கள்.
நான் வாழ்க்கையில் பொய் சொன்னதும் இல்லை சொல்லவும் மாட்டேன்,நான் சொல்ல வேண்டியதனை நேரடியாக சொல்வேன்.
எனக்கு பொருத்தமற்ற ஆசனத்தில் நான் உட்கார மாட்டேன் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVew4.html
Geen opmerkingen:
Een reactie posten