[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 06:56.32 AM GMT ]
இவர்கள் சில காலம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருந்தனர்.
இதனை தவிர இம்தியாஸ் பாக்கிர் மாக்கர், பாலித ரங்கே பண்டார, சந்திரா கங்கானந்த ஆகியோர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சிக்குள் நிலவிய பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இவர்கள் செயற்குழு உறுப்பினர் பதவியை இழந்ததுடன் மீண்டும் கட்சியில் ஐக்கியம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இவர்களுக்கு பதவிகள் கிடைத்துள்ளன.
போர்க்கால வேகத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகும் ஐ.தே.க
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு போர்க்கால வேகத்தில் கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.
இதன் ஒருகட்டமாக கட்சியின் அனைத்துத் தொகுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஸ்ரீகொத்தாவில் குழுவொன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த தொகுதிகளின் உடனடி நிலவரம், அரசுக்கு சார்பான மற்றும் எதிரான நிலவரங்கள் குறித்து நாளாந்தம் இந்தக்குழுவுக்கு அறிக்கை அனுப்புமாறு கட்சித் தலைமையிலிருந்து சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனஜய செயற்திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் முன்னெடுத்து ஊவா மாகாண சபைத் தேர்தலில் கட்சி பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆளுங்கட்சியின் மீது அதிருப்தி கொண்டுள்ள அதன் ஆதரவாளர்களை ஐ.தே.க.பக்கம் இழுத்தெடுக்கும் வகையிலான நடவடிக்கை ஒன்றையும் முன்னெடுக்க கட்சியின் தலைமைத்துவக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை ஐ.தே.க.வின் தலைமைத்துவக்குழு வரும் 10ம் திகதி நடத்தவுள்ளதாகவும் ஸ்ரீகொத்தா வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeo7.html
மட்டக்களப்பு சென்று திருப்பிய வான் ஆற்றுக்குள் பாய்ந்தது! மூவர் பலி
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 07:00.59 AM GMT ]
கண்டி - மாத்தளை பிரதான வீதியில் கட்டுகஸ்தோட்டையை அண்மித்த பிரதேசத்தில் இன்று அதிகாலை வான் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இவ் விபத்தில் மாவனெல்லை உயன்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் யூசுப், மொஹமட் பாரூக், பாத்திமா மிசிரியா என ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சென்று வீட திரும்பும் வழியில் அதிகாலை 4 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி நித்திரைக்குள்ளாகி இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழநதவர்களின் சடலங்கள் தற்போது கட்டுகஸ்தோட்டை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVepy.html
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்க்க திட்டம்:வசந்த பண்டார
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 07:04.37 AM GMT ]
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் நூற்றுக்கு 51 வீத வாக்குகள் கிடைப்பதை தடுக்க கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையிலுள்ள சிறு சிறு கட்சிகளை தமது பக்கம் இழுத்துக்கொண்டுள்ளதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் பயன்படுத்தி அத்தோடு அரசிலுள்ள சில அதிகாரப் பரவலாக்கலை ஆதரிப்போரையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் இணைத்துக்கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை தோல்வியடையச் செய்து அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுகின்றது.
இதன் ஒரு கட்டம்தான் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையே நடக்கப்போகும் பேச்சுவார்த்தையாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இந்த இரண்டு தமிழ், முஸ்லிம் இனவாதக் கூட்டு இன அடிப்படையில் வாக்குகளை சிதற செய்து மஹிந்தவுக்கு நூற்றுக்கு 51 வீத வாக்குகளை கிடைக்காமல் செய்து பேரம் பேசும் பலத்தை தமது கையிலெடுத்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கும்.
இதன்போது சிறு சிறு கட்சிகளும் அரசிலுள்ள அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கும் குழுவினரும் இதே நிலைப்பாட்டை எடுக்கும்.
அதேவேளை 3ஆவது தடவையாக ஜனாதிபதிக்கு போட்டியிட முடியாது என்ற ஒரு கருத்தை எதிர்க்கட்சியினர் இப்போதிருந்தே ஏற்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வென்றால் அவ்வெற்றி திருட்டுத்தனமாக பெறப்பட்டது என பிரசாரம் செய்வதற்கும் பயன்படுத்தவுள்ளது எனத் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVepz.html
Geen opmerkingen:
Een reactie posten