[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 07:21.47 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மேல்மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் நேரடி விவாத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா முன்னெடுத்துவரும் பொய் பிராசரங்கள் குறித்தே இவ் நேரடி விவாதத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.
பொதுபல சேனாவின் சங்க சம்மேளன மாநாடு கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றிருந்தார்.
அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானதாகும். முஸ்லிம், சிங்கள மக்கள் நீண்டகாலமாகவே இந்நாட்டில் மிகவும் நெருக்கமான உறவை பேணி வந்துள்ளனர்.
இந்நிலையில் முஸ்லிம்களால் பெரும்பான்மையினமான சிங்கள மக்களுக்கு பல இடையூறுகள் விளைவிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
ஞானசார தேரரினதும் பொதுபலசேனாவின் செயற்பாடுகளுமே முஸ்லிம், சிங்கள இன உறவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயங்கள் குறித்து நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு விரும்பினால் வாருமாறும், அதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கான ஏற்பாட்டை செய்துகொள்ளலாம் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளதாக அக் கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை முஸ்லிம் தலைமைகள் பொதுபல சேனாவுடன் நேரடி விவாதத்திற்கு முன் வராது பின்னிற்கிறது என அவ்வமைப்பின் செயலாளர் பல தடவைகள் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் முஜிபுர் ரஹ்மான் ஞானசார தேரரை விவாதத்திற்கு அழைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVep1.html
ரணில் விக்கிரமசிங்கவை உளவு பார்த்த மத்திய வங்கி ஆளுனர்
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 07:26.54 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும் அங்குள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்திப்பது, கலந்துரையாடல்களில் பங்கேற்பது என்று அரசியல் சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் அவர் கன்சர்வேட்டிவ் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கெடுத்திருந்தார்.
இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான விபரங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் கப்ராலை ஈடுபடுத்தியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் கூட்டங்களில் அழைப்பின்றி ஆஜராகும் இவர் பின்வரிசையில் உட்கார்ந்து கொண்டு அங்கு பேசப்படும் விடயங்கள் குறித்து இமெயில், வாட்ஸ் அப்பினூடாக அரசாங்கத்துக்கு உடனுக்குடன் தகவல்களை வழங்கியுள்ளார்.
லண்டனில் கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தபோது, அஜித் கப்ரால் உள் நுழைய எத்தனித்த போது வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர் கப்ராலின் உளவு பார்க்கும் செயற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் அறிந்து கொண்டுள்ளனர்.
அரச அதிகாரிகள் இவ்வாறு உளவுபார்க்கும் செயல்களில் ஈடுபடுவது முறையற்றது என்று லண்டன் அதிகாரிகள் சுட்டிக்காட்டியபோது தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருப்பதாக அஜித் கப்ரால் சமாளிக்க முயன்றுள்ளார்.
அரச அதிகாரிகள் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று அனுமதி மறுக்கப்பட்டபோது, தான் அரசியல் ரீதியாக பதவியமர்த்தப்பட்டவன் என்று கூறி கெஞ்சாத குறையாக மாநாட்டு மண்டபத்தினுள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszATXKVep2.html
Geen opmerkingen:
Een reactie posten