தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

இந்தியாவில் அனகாரிக தர்மபாலவின் நினைவாக தபால் முத்திரை வெளியீடு



அடுத்த வாரம் நாடு திரும்பும் சந்திரிக்கா- சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களை சந்திக்க திட்டம்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 11:20.48 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அடுத்த வாரம் மீண்டும் நாடு திரும்ப உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வி யசோதராவிற்கு மூன்றாவது பிள்ளை அண்மையில் பிறந்தது.
பிறந்த பிள்ளை மற்றும் மகளின் நலன் குறித்து அறிய முன்னாள் ஜனாதிபதி அண்மையில் லண்டன் சென்றார்.
நேற்று முன்தினம் நாடு திரும்பவிருந்த அவர் சில தினங்கள் பயணத்தை ஒத்திவைத்தாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாதுகாக்கும் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த வாரம் நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, மாதுளுவாவே சோபித தேரர் ஆகியோருடன் கலந்துரையாட உள்ளதாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmp7.html

தெஹிவளையில் தோட்டக்களுடன் துப்பாக்கி மீட்பு
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 11:34.45 AM GMT ]
தெஹிவளை கவுடான பிரதேசத்தில் தோட்டக்களுடன் துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த துப்பாக்கியும் தோட்டக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmqy.html

இந்தியாவில் அனகாரிக தர்மபாலவின் நினைவாக தபால் முத்திரை வெளியீடு
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 01:06.16 PM GMT ]
இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியின் தந்தை என போற்றப்படும் அனகாரிக தர்மபாலவை கௌரவிற்கும் வகையில் இந்தியாவில் தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.
இவர் அடிப்படைவாதிகளிடம் இருந்து பௌத்த மதத்தை காப்பற்றி அதனை பௌத்தர்களுக்கு உரியதாக்க பங்களிப்பை செய்திருந்தார்.
இந்திய ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற வைபவத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த தபால் முத்திரையை வெளியிட்டு வைத்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இது இருப்பதாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்புகள் மேலும் அதிகரிக்கும் எனவும் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிணைப்பின் மூலம் இரு நாடுகளின் மக்களுக்கு நன்மை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புத்த மதம் அமைதியான வாழ்க்கைக்கு முன்னுதாரணத்தை கொடுக்கும் மதம் என்பதால், அனகாரிக தர்மபால, புத்த மதத்தின் அடிப்படையில் செய்த விடயங்களால், பொருளாதாரம், சமூக ரீதியாக இரு நாடுகளுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்திய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அனகாரிக தர்மபாலவின் சேவையை நினைவு கூர்ந்தும் இந்திய தபால்துறை அவரது ஞாபகமான தபால் முத்திரையை வெளியிட்டுள்ளதை பாராட்டுவதாகவும் முகர்ஜி மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmqz.html

Geen opmerkingen:

Een reactie posten