[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 11:55.18 PM GMT ]
மேற்குலக நாடுகளின் இரண்டு தூதரகங்கள் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை மாற்றியமைக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் இரகசியமான முறையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
நாட்டின் அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாக தலையீடு செய்யும் வகையில் இரண்டு வெளிநாட்டு தூதரகங்கள் செயற்பட்டு வருகின்றன.
இதற்காக குறித்த இரண்டு நாடுகளும் பாரியளவில் பணத்தை செலவிட்டு வருகின்றன.
எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல் மற்றும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாடு ஆகியவற்றை இலக்கு வைத்து இந்த தூதரகங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
தூதரகங்களின் வெளிக்கள செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும், தூதரக அதிகாரிகள் அடிக்கடி வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை படையினர் துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் வெளியிடும் நோக்கில் புதிய காணொளியொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அல்ஜசீரா தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் இந்த சூழ்ச்சித் திட்டத்தின் ஓர் பகுதியாகும் என சிங்கள வார பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATYKWnp4.html
புலிகள் என்று புதிய வழக்குகளை தாக்கல் செய்து அரசியல் கைதிகளை சிறையில் அடைக்க முயல்வது கவலைக்குரியது!- மன்றில் தவராசா வாதம்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 11:50.00 PM GMT ]
2008ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் மாதம் 16ம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் WP NA- 3656 என்ற இலக்கமுடைய பஸ் வண்டிக்கு குண்டுவைத்து அதில் பிரயாணம் செய்த பயணிகளை கொலை செய்வதற்கு எத்தனித்தமையுடன்,
மேலும் அசையும், அசையா ஆதனமொன்றிற்கு இழப்பை ஏற்படுத்தி அதனை அழித்துவிடும் செயலை புரிந்ததாக அவசரகால ஒழுங்கு விதிகளின் 25(1ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தைப் புரிந்ததாக 13 தடயப் பொருட்களையும் 36 அரச சாட்சியங்களையும் உள்ளடக்கி சட்டமா அதிபரினால் யாழ். அச்சுவேலி வடக்கு அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்டவரும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கிராம சேவை உத்தியோகத்தராக கடமைபுரிந்த நாகலிங்கம் மதனசேகருக்கு எதிராக சட்டமா அதிபரினால் 2013ம் ஆண்டு மார்கழி மாதம் 23ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் அரச சட்டத்தரணி நியோமி விக்கிரமசிங்க தனது வாதத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் நாகலிங்கம் மதனசேகர் கொழும்பில் பஸ் குண்டுத் தாக்குதலை நடாத்துவதற்கு முயன்றுள்ளார்.
யுத்த காலத்தில் தப்பிச்சென்று தற்பொழுது பிரான்ஸ் நாட்டில் வசித்துவரும் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த மகுந்தன் என்பவர் நிதிஉதவி வழங்கியதுடன் இந்தத் குண்டுத் தாக்குதலை நடாத்த உத்தரவும் இட்டுள்ளார்.
எனவே இந்த வழக்கில் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நாகலிங்கம் மதனசேகருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரத்தை மீளப்பெற்று நாகலிங்கம் மதனசேகர் மற்றும் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த முகுந்தன் ஆகிய இருவருக்கும் எதிராக புதிய குற்றச்சாட்டுப்பத்திரத்தை தாக்கல் செய்ய அரச சட்டத்தரணி நீதிமன்றில் அனுமதி கோரிய வேளையில் எதிரி தரப்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா அரச தரப்பின் விண்ணப்பத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
மேலும் தனது வாதத்தில், இந்த வழக்கில் எதிரியாக பெயர் குறிபிடப்பட்டுள்ள நாகலிங்கம் மதனசேகர் 2011ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த வேளையில் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் திகதி பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரின் வேண்டுகோளையடுத்து பயங்கரவாதத் தடைப்பிரிவுத் தலைமையத்திற்கு சென்ற வேளையிலேயே கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலம் பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடாத்திய பின்னர்&2013ம் ஆண்டு மார்கழி மாதம் 23ம் திகதி சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக 2014ம் ஆண்டு ஆனி மாதம் 23ம் திகதி அரச சாட்சியங்களுக்கு நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பப்பட்டு எதிரியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவுசெய்த பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத், பொன்சேகா உட்பட சகல சாட்சிகளும் நீதிமன்றில் சாட்சியமளிக்க சமூகமாகியிருக்கும் வேளையில், அரச சட்டத்தரணி புதிய குற்றச்சாட்டுப்பத்திரத்தை தாக்கல் செய்ய நான்கு மாதம் தவணை கோரியிருந்தார்.
நீதிமன்றமும் அரச சட்டத்தரணியின் விண்ணப்பத்தையேற்று புதிய குற்றச்சாட்டுப்பத்திரத்தை தாக்கல் செய்ய நான்கு மாத காலம் தவணை வழங்கியது. ஆனால் புதிய குற்றச்சாட்டுப் பத்திரத்தை தாக்கல் செய்யாமல் மேலும் மூன்றுமாத தவணை கோருவது சட்டமா அதிபர் திணைக்களம், தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குக்களை முடிவிற்கு கொண்டு வராமல் நியாயமற்ற முறையில் காலம் கடத்துவது மிகத் தெளிவாகின்றது என வாதிட்டார்.
அத்துடன், இந்த வழக்கில் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் நாகலிங்கம் மதனசேகர் மூன்று வருடங்களுக்கு மேற்பட்ட காலம் பிணையுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்காமல் பிரான்ஸ் நாட்டிலிருக்கும் முகுந்தன் என்பவரை சர்வதேச பொலிசார் மூலம் கைது செய்து இந்த நாட்டிற்கு கொண்டுவந்து புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரச சட்டத்தரணி நீண்ட கால அவகாசத்தை கோருகின்றார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட எனது நீண்டகால சட்டத்துறை அனுபவத்தில் இலங்கைக்கு வெளியேயிருந்து புலிகள் என சர்வதேச அரசுகளின் அனுசரணையுடன் கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட எந்தப் புலி உறுப்பினர்களும் நீதவான் நீதிமன்றிலோ அல்லது மேல் நீதிமன்றிலோ ஆஜர்படுத்தப்படவுமில்லை, அவர்களுக்கு எதிராக இன்றுவரை எந்த வழக்குகளும் தாக்கல் செய்யப்படவுமில்லை.
அரசியல் கைதிகளை பொது மன்னிப்பபு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக சட்டமா அதிபர் யாழ் நகரில் குறிப்பிட்டுள்ளதாக இலத்திரனியல் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியதனால் அரசியல் கைதிகள் தங்களுக்கு பொது மன்னிப்பு கிடைத்துவிடும், தாங்கள் குடும்பத்துடன் இணைந்து விடலாம்என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இந்தநிலையில், சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணைகளை முடிவிற்கு கொண்டுவர நீதிமன்றிற்கு ஒத்துழைக்காமல் புலிகள் என்ற போர்வையில் புதிய வழக்குகளை தாக்கல் செய்ய அரச சட்டத்தரணி நீதிமன்ற அனுமதியை கோருவது வியப்பிற்கும் கவலைக்குமுரியது என வாதிட்டார்.
இதனையடுத்து, மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன், சட்டமா அதிபருக்கு புதிய குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்ய இறுதித் தவணையாக ஐந்து வார காலத்தை வழங்கியதுடன், புதிய குற்றச்சாட்டுப் பத்திரம் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்படாவிடின், நாகலிங்கம் மதனசேகருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை கார்த்திகை மாதம் 10ம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKWnp3.html
கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் சந்திரிகாவிற்கு ஆதரவளிக்க விருப்பம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 12:08.02 AM GMT ]
கடந்த வாரம் இரண்டு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளக் கூடிய பொது வேட்பாளராக சந்திரிகா அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முயற்சிகளில் ரணில் விக்ரமசிங்கவைப் போன்றே சந்திரிகாவும் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என்பது சந்தேகமே எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவதில் சந்திரிகாவும் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnp5.html
Geen opmerkingen:
Een reactie posten