தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 oktober 2014

அமெரிக்க விமானிகளை தரையில் கண் வைக்கும் ISIS

அமெரிக்க விமானிகள் சும்மா பறந்து, பறந்து ஈராக் மேல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈராக் நாட்டில் சில மாநிலங்களில் நிலைகொண்டுள்ள ISIS தீவிரவாதிகள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு விமானங்கள் பாரிய தாக்குதலை நடத்துகிறதோ என்னமோ, ஆனால் தரையில் தாக்குதலை நடத்த ISIS இயக்கம் திட்டமிட்டுள்ளது. நீங்கள் வானில் இருந்தபடி தான் தாக்குவீர்கள். ஆனால் நாங்கள் தரையில் இருந்த படி பேஃஸ் புக் ஊடாகத் தாக்குவோம் என்று புதுவகையில் மிரட்டியுள்ளார்கள் தீவிரவாதிகள். அட அதற்கு போய் ஏன் பயப்பிடவேண்டும் ? என்று நீங்கள் நினைப்பீர்கள். இத்தீவிரவாதிகள் மிரட்டுவதை அசட்டைசெய்யவும் முடியாது.
அதாவது ஈராக்கில் தாக்குதல் நடத்தும் அமெரிக்க விமானப்படையினரின் சில போட்டோக்களை, தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை ஒன்றுதான். குறித்த இந்த நபர்களின் உறவினர்கள் பலர், பேஃஸ் புக்கில் இருப்பார்கள். அவர்கள் யார் என்பதனைக் கண்டறிந்து அவர்கள் மேல் அந்த நாட்டில் வைத்து தாக்குதல் நடத்துங்கள். அமெரிக்காவின் விமானத் தாக்குதல் தானாகவே குறையும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களின் கடமை இதுவாகும் என்று ISIS தீவிரவாதிகள் மேலும் தெரிவித்துள்ளார்கள். ஈராக்கில் தாக்குதலில் ஈடுபடும் அமெரிக்க விமானப்படையினரின் தகவல்கள் எவ்வாறு கசிந்தது ?
இதுபோக அவர்களின் குடும்ப அங்கத்தவர்களை பாதுகாக்கும் மேலதிக சுமையும் தற்போது அமெரிக்காவின் தலையில் வீழ்ந்துள்ளது. அத்தோடு விமானப்படையில் உள்ளவர்களின் மனைவிமார், அக்கா , தங்கச்சி, மற்றும் தம்பிமார்கள் யாரும் பேஃஸ் புக்கை பாவிக்கவேண்டாம் என்று, அமெரிக்க உளவுத்துறை அவர்களுக்கு எச்சரித்துள்ளது. இதனால் விமானப்படையின் உள்ளவர்களின் உறவினர்கள், இந்த வேலை தேவைதானா ? என்று சலித்துக்கொள்ளும் அளவு, பிரச்சனை முற்றியுள்ளது. விமானப்படையை விட்டு வேறு வேலைகளில் ஈடுபடலாமே, எமது குடும்பமாவது நிம்மதியாக இருக்கும், என்று உறவினர்கள் சொல்ல ஆரம்பித்தால் அது பெரும் சிக்கலில் தான் போய் முடியும். என்ன செய்வது ISIS தீவிரவாதிகளை சமாளிப்பதே பெரும் பாடாக உள்ளது. 
http://www.athirvu.com/newsdetail/1147.html

Geen opmerkingen:

Een reactie posten