[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 06:35.13 AM GMT ]
கிணற்றில் சிறுத்தையொன்று வீழ்ந்து கிடப்பதை பொதுமக்கள் நேற்று அவதானித்துள்ளனர்.
இது குறித்து அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் சிறுத்தையை மீட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் சிறுத்தையை மீட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmt2.html
ராஜிதவுக்கு எதிரான மீனவர் எதிர்ப்பு! பின்னணியில் மஹிந்த அரசாங்கம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 06:58.37 AM GMT ]
அரசாங்கத்தின் திருட்டுக் குழந்தையான பொதுபல சேனாவை மற்றைய அமைச்சர்கள் போன்று செல்லக்குழந்தையாக தாலாட்ட அமைச்சர் ராஜித தயாராக இல்லை. இதன் காரணமாகவே அவருக்கு எதிராக பொதுபல சேனாவுடன் இணைந்து அரசாங்கம் எதிர்ப்பு நடவடிக்கைகளை தூண்டிவிட்டுள்ளதாக திவயின பத்திரிகையின் செய்தி தெரிவிக்கின்றது.
அண்மைக்காலமாகவே அரசாங்கத்தின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள அமைச்சர் ராஜித சேனாரத்தின, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார்.
இது அரசாங்கத்துக்கு கடும் சினத்தை மூட்டியுள்ளது. இதன் காரணமாக அவரை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இன்றைய திவயின பத்திரிகையின் செய்தியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் விரைவில் வரவுள்ள தேர்தலின் போது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவ காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அரசாங்கம் இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையானது முட்டாள்தனமான நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது என்றும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmt3.html
அடுத்த ஜனாதிபதி மஹிந்த தான்! அடித்துச் சொல்லும் முரளிதரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 07:10.51 AM GMT ]
அவ்வாறு வாக்களிக்காவிட்டாலும் மீண்டும் அவரே நிச்சயம் ஜனாதிபதியாக தெரிவாவார்.
தோல்வியை சந்திக்கவுள்ள எதிரணியின் வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதால் எவ்விதமான பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்களவர் ஒருவர்தான் ஜனாதிபதியாக வருவார். தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்காவிட்டாலும், நிச்சயம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் ஜனாதிபதியாக வருவார்.
ஏனெனில் 90 வீதமான சிங்கள மக்கள் அவர் பக்கம் தான் நிற்கின்றார்கள், தோல்வியடையும் வேட்பாளருக்கு வாக்களித்துப் பழகிய எமது மக்கள் இனிமேலும் தோல்வியடைபவருக்கு வாக்களிக்கும் எண்ணமிருந்தால் வாக்குச் சாவடிக்கே போகாமலிக்கலாம்.
அரசியல்வாதி என்று சொல்லிக்கொண்டு மக்களைத் திசை திருப்பும் வகையில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய அரசியலை பயன்படுத்த வேண்டும். அதனைவிடுத்து ஊடகங்களில் அறிக்கை விடுவது மாத்திரம் அரசியல் அல்ல என்றும் முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmt4.html
Geen opmerkingen:
Een reactie posten