[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 03:10.33 AM GMT ]
சுதந்திரத்தின் பின்னர் நடைபெறும் மிகவும் மோசமான தேர்தலாகவே இதனை குறிப்பிட வேண்டும்.
அவசர அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு நாம் கோரவில்லை. அரசாங்கமே அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடாத்த முயற்சிக்கின்றது.
மக்கள் அரசாங்கத்தை நிராகரித்து வருகின்றமையை உணர்ந்து கொண்டதனால் இவ்வாறு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகின்றது.
நீண்ட காலம் எதிர்க்கட்சியாகவே இருக்கும் போது சில முரண்பாடுகள் ஏற்படும் என்பதனை மறுப்பதற்கில்லை. அதன் காரணமாகவே கட்சி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக்கட்சி வெற்றியீட்டக் கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.
இந்த நாட்டைச் சேர்ந்த கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உதாசீனம் செய்ய முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த தேர்தலை சுலபமாக வெற்றியீட்ட முடியாது, ராஜபக்ச அரசாங்கத்துடன் கடுமையாக மோதியே வெற்றியீட்ட நேரிட்டுள்ளது.
நாட்டை பாதுகாக்கவும் பௌதீக ஒருமைப்பாட்டை உறுதி செய்யவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை அவசியம் என்ற பிழையான நிலைப்பாடு காணப்படுகின்றது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது, நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாகவே தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதற்கில்லை.
மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தினால் தீர்வுத் திட்டங்களை வழங்க முடியவில்லை.
சர்வதேச அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. எனவே இம்முறைத் தேர்தலில் ஜனாதிபதியினால் வெற்றியீட்டக் கூடிய சாத்தியம் கிடையாது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிறுபான்மை கட்சிகளின் ஆதரவும் கிடைக்கப் பெற்றுள்ளது என மங்கள சமரவீர சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmtz.html
இலங்கை மீது சர்வதேச தடைகள் விதிக்கப்படலாம்: தயான் ஜயதிலக
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 05:14.48 AM GMT ]
இலங்கையின் சிரேஷ்ட ராஜதந்திரியான தயான் ஜயதிலக இன்றைய ஞாயிறு திவயின சிங்களப் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.
அதன்போது அவர் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாட்டை விமர்சிக்கும் நீதித்துறை விவகாரம்.
எனினும் இந்த விவகாரத்தில் இலங்கை அரசின் வெளியுறவுத்துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால், குறித்த தடை நீக்கத்தை தவிர்த்திருக்க முடியும்.
ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் அலட்சியமாக இருந்த காரணத்தினாலேயே ஐரோப்பிய நாடுகளும் அசட்டையாக இருந்தன.
அது விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கத்துக்கு வழியேற்படுத்தியது.
இன்னொரு புறத்தில் விடுதலைப் புலிகளுடனான பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்தை ஐரோப்பிய நாடுகள் கைவிட்டுள்ளன என்பதற்கான சமிக்ஞையாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
2006ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்டது.
அப்போதைய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தில் சிறப்பாக செயல்பட்டது. இன்னொரு புறத்தில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமரின் மனைவி சுகந்திகா இந்த விடயத்தில் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.
ஆனாலும் இலங்கை அரசாங்கம் ராஜதந்திர விடயங்களில் அவரது பங்களிப்பை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி விட்டது.
ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படலாம்.
அந்த வகையில் இந்தத் தடை நீக்கத்தின் மூலமாக விடுதலைப் புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியாக பாரிய வெற்றியொன்றைப் பெற்றுள்ளது.
மறுபுறத்தில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கம் இலங்கைக்குப் பெரும் அபாயமாக உருவெடுத்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கையின் பின்னர் இலங்கை மீது சில தடைகள் விதிக்கப்படலாம் என்றும் தயான் ஜயதிலக தனது நேர்காணலில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmt1.html
Geen opmerkingen:
Een reactie posten