[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 06:35.23 AM GMT ]
ஜனாதிபதியின் அமெரிக்கப் பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸை பலர் முன்னிலையில் ஓங்கி அறைந்திருந்தார்.
எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து கீழே விழுந்த கிறிஸ் நோனிஸை பல தடவைகள் சஜின் வாஸ் காலால் எட்டி உதைத்திருந்தார்.
இதன் காரணமாக அவமானத்துக்குள்ளான கிறிஸ் நோனிஸ் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்திருந்தார். இந்தச் சம்பவம் ஊடகங்களில் கசிந்து அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கிறிஸ் நோனிஸ் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
நாடு திரும்பியவுடன் சஜின் வாஸ் குணவர்த்தனவை அலரி மாளிகைக்கு வரவழைத்து கடுமையாக திட்டியுள்ளார்.
ஒருகட்டத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஜனாதிபதி கைநீட்டி சஜின் வாஸை பலமாக அறைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ள கிறிஸ் நோனிஸை சமாதானப்படுத்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் லண்டனுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சமாதானமடைந்துள்ள கிறிஸ் நோனிஸ், தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்தி-
- தவறான தகவலைக் கூறி வருத்தம் தெரிவித்த அமைச்சர்
- சஜின் வாஸ் தாக்குதல்! பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் ராஜினாமா
http://www.tamilwin.com/show-RUmszATVKVfo4.html
அடுத்த ஜனாதிபதி தேர்தல் நியாயமானதாக இடம்பெறுமா?
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 06:41.02 AM GMT ]
இதற்கமைய 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயம் திறக்கப்பட்ட வேளையில் அரச ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளதாக அவ் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,
ஊவா மாகாண சபை தேர்தலின் போது தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள் பல பதிவாகியிருந்தன. எதிர்க்கட்சி காரியாலயங்கள் பலதும் தாக்கப்பட்டன. எனவே இத்தேர்தலை நீதியானது என கூற முடியாது.
அத்தோடு ஊவா தேர்தல் அரச ஊழியர்கள் பலர் ஆளும் தரப்பின் தேர்தல் பிரசார பணிக்கு ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுவதற்கான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன. இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து கொழும்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி காரியாலயம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ச தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவில் பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதற்கு அப்பால் சில அரச ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இதற்கமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிவ்ரால் ஜயதிலக்க மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் பலர் பங்கு பற்றினர்.
எனவே ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தற்போதே சட்ட விதிமுறைகள் மீறப்பட்டு வருகின்றன.
ஆகவே அடுத்த ஜனாதிபதி தேர்தல் நீதியானதாக இடம்பெறுமா என கருத முடியாது என அவ்வமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfo5.html
ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் ஐ.தே.கட்சியின் தலைமைத்துவச் சபை
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 06:45.05 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலுக்காக எதிர்க்கட்சியை உடனடியாக தயார்படுத்துவதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபை கூடவுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி தலைமைத்துவச் சபையின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவின் தலைமையில் இந்த அமர்வு நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமைத்துவச் சபை முன்னெடுத்து வரும் ஜனஜய வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற முன்னேற்றம் தொடர்பில் விரிவான ஆராய்ந்து, ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து, கிராம மற்றும் கீழ் மட்டத்தில் செயற்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfo6.html
அளுத்தகம வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 131 வீடுகள் கையளிப்பு
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 06:57.00 AM GMT ]
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
87 வீடுகளின் சேதவிபரங்கள் அளவிடப்பட்டு அவற்றை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை 49 வர்த்தக நிலையங்கள் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் 24 வர்த்தக நிலையங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவடையவுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfo7.html
Geen opmerkingen:
Een reactie posten