மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் மொழிக்குச் சொந்தக்காரராகிய நாம் இன்று ஆட்சியதிகாரமற்ற ஒரு இனமாக உள்ளோம் என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சிறப்புத் தலைவர் துரைராஜா தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் ஜேர்மனி ஹம் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் தனது உரையில்,
உலகத்தில் 6 மொழிகள் தான் உலகில் செம்மொழியாக இருக்கின்றது. அதில் தமிழ்மொழியும் ஒரு செம்மொழி என்பதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறேன்.

ஒரு மொழி செம்மொழியாவதற்கு குறைந்தது 1500 ஆண்டுகளுக்கு மேல் பாவனையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மொழி 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.
அவ்வாறான மூத்த மொழியின் சொந்தக்காரர்கள் நாம். உரிமைக்காரர்கள் நாம். ஆனால் இன்று ஆட்சியதிகாரமில்லாத ஒரு இனமாக உள்ளோம்.
கிட்டத்தட்ட உலகத்திலே 160 நாடுகளுக்கு மேல் தமிழர்கள் வாழ்கின்றார்கள். எமக்கென்று நாடு இல்லை. ஒரு ஆட்சியதிகாரமில்லாத நிலையில் வாழ்கிறோம் என்பதை எத்தனை பேர் சிந்தித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.utpm-01  utpm-03utpm-04