[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 04:36.05 PM GMT ]
பத்தரமுல்லையை அண்மித்த தலவத்துகொடை பிரதேசத்தில் இந்த வெடிவிபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் முன்பாகவே வெடிவிபத்து இடம்பெற்றுள்ளதாக அப்பகுதியிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
எனினும் வெடிவிபத்து குறித்து மேலதிக விபரங்கள் இதுவரை தெரியவில்லை. எனினும் சம்பவ இடத்துக்கு பொலிசாரும், இராணுவத்தினரும் விரைந்துள்ளனர்.
நாடாளுமன்றம், முக்கிய அமைச்சுகள் என்பன இந்த வெடிவிபத்து ஏற்பட்ட பிரதேசத்துக்கு அண்மையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnu0.html
வாழைச்சேனையில் வயோதிப பெண் படுகொலை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 03:52.13 PM GMT ]
மேற்படி கோழிக்கடை வீதியில் தனியாக வசித்து வந்த றம்ழான் கலீமத்தும்மா (வயது 67) என்ற வயோதிபப் பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த மூதாட்டி தனியாக வாழ்ந்துள்ளதோடு வாழ்வாதாரத்துக்காக இடியப்பம், அப்பம் போன்ற உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளதோடு மீதப்பட்ட நேரத்தில் பன்புல் பாய் போன்றவற்றையும் பின்னி விற்பனை செய்து வருமானத்தையும் ஈட்டி வந்துள்ளார்.
இன்று மாலை அவரது வீட்டுக்கு சிறுமியொருவர் சென்ற போது, மூதாட்டி கழுத்து வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுபற்றிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnuz.html
ஆசிரியர் சங்கம் நாளை போராட்டம்: த.தே.கூட்டமைப்பு மற்றும் த.தே.ம முன்னணி முழு ஆதரவு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 04:44.01 PM GMT ]
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் சர்வதேச ஆசிரியர் தினமான நாளை யாழ்.நகரில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
மாணவர்களின் ஆளுமையை வளப்படுத்துவது மட்டுமல்லமல், மாணவர்களுடைய எதிர்காலத்திற்கான அத்திபாரத்தையும் இடும் ஆசிரியர்கள் சமகாலத்தில் பல்வேறு விதமான நெருக்குவாரங்களை எதிர் கொள்கின்றார்கள்.
அவர்களுடைய நலன்கள் தொடர்பில் அரசாங்கமும் பொறுப்புவாய்ந்த தரப்பு க்களும் கவனயீனமாகவே இருக்கின்றனர்.
எனவே சர்வதேச ஆசிரியர் தினமான ஒக்டோபர் 6ம் திகதி யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆசிரியர்களின் உரிமைகளுக்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் பிற்பகல் 2மணிக்கு குறித்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன, தங்கள் முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளன.
அத்துடன் குறித்த போராட்டத்தில் சகல வேற்றுமைகளையும் கடந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வியலாளர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என மேற்படி இரு கட்சிகளும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnu1.html
Geen opmerkingen:
Een reactie posten