தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 oktober 2014

நெடுந்தீவில் கரையொதுங்கிய தமிழக மீனவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது (படம் இணைப்பு)


கடந்த மாதம் 6ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிச் சென்ற வேளை கடலில் வீழ்ந்து உயிரிழந்த சிலுவைமுத்து ஞானப்பிரகாசம் (வயது 47) என்பவரின் சடலம் இன்று சனிக்கிழமை வட்டுக்கோட்டையில் உள்ள தென்னிந்தியத் திருச்சபை சேமக்காலையில் நல்லக்கம் செய்யப்பட்டது.

இந்தத் தகவலை இந்திய துணைத் தூதகரத்தின் பிரதி துணைத் தூதுவர் தட்சணாமூர்த்தி தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற வேளை நடுக்கடலில தவறிவிழுந்த ஞானப்பிரகாசம் காணாமல்போயிருந்தார். இவரது சடலம் சில நாள்களின் பின்னர் நெடுந்தீவுப் பகுதியில் கரையொதுங்கியது.

அ.தி.முக. தொண்டரான இவர் இரட்டை இலைச்சின்னம் மற்றும் சிலுவை ஆகிய உருவங்களை கையில் பச்சை குத்தியிருந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டதால் இறந்தது தனது மகன்தான் என்பதை அவரது தந்தை சிலுவைமுத்து உறுதி செய்தார். யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் இவரது சடலம் வைக்கப்பட்டிருந்தது. தென்னிந்தியத் திருச்சபைப் பங்கைச் சேர்ந்த இவரது சடலத்தை இங்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை வட்டுக்கோட்டையில் உள்ள தென்னிந்தியத் திருச்சபையினர் மேற்கொண்டனர்.

இதனையடுத்து அவரது சடலம் இன்று வட்டுக்கோட்டையிலுள்ள தென்னிந்தியத் திருச்சபை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யும் நிகழ்வில் இந்திய துணைத் தூதகரத்தின் பிரதி துணைத் தூதுவர் தட்சணாமூர்த்தி கலந்துகொண்டார். சடலத்தை உரிய முறையில் அடக்கம் செய்ய ஏற்பாடுகளைச் செய்த தென்னிந்தியத் திருச்சபையினருக்கும் அதன் ஆயர் டானியல் தியாகராஜாவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
05 Oct 2014

Geen opmerkingen:

Een reactie posten