[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 08:32.23 AM GMT ]
காலை 9 மணியளவில், மன்னார் மாவட்ட நீதிவான் செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில், சட்ட வைத்திய அதிகாரி, என்.ஜ.வி.இருசானா, மன்னார் மாவட்ட வைத்திய அத்தியட்சகர் வி.ரூபன் லெம்பேட், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரதனி அன்ரன் சிசில் ஆகியோரின் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
அண்மையில் வங்காலை மற்றும் சவுத்பார் கடற்கரையில் வெவ்வேறு தினங்களில் கரை ஒதுங்கிய இரு சடலங்களை அடையாளம் காண்பதற்காக இரு வாரங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்குமாறும் சடலம் அடையாளம் காணப்படாதவிடத்து அரச செலவில் அடக்கம் செய்யுமாறும் திடீர் மரண விசாரணை அதிகாரி தே.பி.சிந்தாத்துரை உத்தரவிட்டிருந்தார்.
கடந்த 3.9.2014 மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் அந்தச் சடலத்தை பிரோத பரிசோதனைக்குப் பின் 24.9.2014 அன்று அரச செலவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தச் சடலத்தை அடக்கம் செய்வதற்கு பதிலாக 15.9.2014 அன்று மீட்கப்பட்ட இரண்டாவது சடலம் பிரோத பரிசோதனை செய்யப்படாமல் அடக்கம் செய்யப்பட்டமை கடந்த 29.9.2014 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் 29.9.2014 அன்று இரண்டாவது சடலத்தை பிரேத பரிசோதனை செய்து அரச செலவில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அச்சடலம் அங்கு இல்லாதது தெரியவந்தது.
இந்த விடயம் மன்னார் நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை இன்று சனிக் கிழமை மீண்டும் தோண்டி எடுத்து பிரோத பரிசோதனை மேற்கொள்ளும் படி மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரடணம் கடந்த 2.10.2014 அன்று உத்தவிட்டிருந்தார்.
அவ்வுத்தரவின்படி, இன்று மன்னார் மாவட்ட நீதிவான் செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரோத பரிசோதனைக்காக மீண்டும் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszATYKVew6.html
முஸ்லிம் வாக்குகள் வேண்டுமா? நிபந்தனை விதிக்கும் மு.கா.
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 08:56.52 AM GMT ]
முதற்கட்டமாக வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒரு கோரிக்கைப் பட்டியல் கையளிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
முஸ்லிம்களின் பொதுவான பிரச்சினைகள் மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகள் என்பன தொடர்பில் இந்த பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிய வருகின்றது.
இது தொடர்பான வரைவொன்றை உருவாக்குவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹஸன் அலி தலைமையிலான குழுவொன்று ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATYKVew7.html
Geen opmerkingen:
Een reactie posten