சீனா நீர்மூழ்கிக் கப்பல் வந்தால் தகவல் தருவோம்: இந்தியாவிடம் இலங்கை வாக்குறுதி
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 09:39.17 AM GMT ]
சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் சஞ்சாரிப்பது குறித்து அண்மையில் இந்தியா கடும் மனவருத்தம் தெரிவித்திருந்தது.
இது குறித்து கருத்து வெளியிட்டு இலங்கையின் அரசாங்க முக்கியஸ்தர்கள், சீனாவுடனான இலங்கையின் உறவை துண்டிப்பது முடியாத காரியம் என்று தெரிவித்துள்ளனர்.
எனினும் இனிவரும் காலங்களில் சீன நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வந்தால், அது பற்றி முன்னதாகவே இந்தியாவுக்கு தகவல் அளிப்பதாக இலங்கை வாக்குறுதி அளித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATYKVexz.html
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 09:13.36 AM GMT ]
தற்போது யாழ். தேவி உள்ளிட்ட ஐந்து ரயில்கள் யாழ்.- கொழும்பு பாதையில் தினமும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.
பளை வரை மட்டும் சேவையில் ஈடுபடும் இந்தப் பாதையின் ரயில் போக்குவரத்து, இம்மாதம் 13ம் திகதி தொடக்கம் யாழ். காங்கேசன்துறை வரை நீடிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் வழக்கமான ரயில் சேவைக்கு மேலதிகமாக நாளாந்த கடுகதி ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
தற்போதைய நிலையில் கொழும்பிலிருந்து ரயில் மூலம் யாழ். செல்ல ஏழுமணிநேரம் தேவைப்படுகின்றது.
எனினும் கடுகதி சேவை மூலம் ஐந்து மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தை சென்றடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ரயிலுக்கும் யாழ்.தேவி கடுகதி சேவை என்றே பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATYKVexy.html
எமது கொள்கையை ஆதரிக்கும் கட்சிக்கு 5 மில்லியன் வாக்குகள்: ஞானசார தேரர்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 09:50.37 AM GMT ]
பொதுபல சேனாவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு ஏற்கனவே அறிவித்தது போல் 5 மில்லியன் வாக்குகளை தமது அமைப்பு உறுதி செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எமது கொள்கைகள் மிக தெளிவாக உள்ளன. நாங்கள் முன்வைக்கும் கொள்கைகளை ஏற்க தயாராக இருந்தால், கட்சி, நிறம், சின்னம் அல்லது இன என்ற வேறுபாடு இல்லாமல் பொதுபல சேனா ஆதரவளிக்கும்.
பொதுபல சேனா அமைப்பை சிலர் தீவிரவாத அமைப்பு என்று கூறினாலும் எமது அமைப்புக்கு பெரும்பான்மையான மக்களின் ஆதரவு உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் எமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தனியான வேட்பாளரை நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்.
குண்டர்கள் நாடாளுமன்றத்தில் பதவிகளில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை.
நாட்டின் அடுத்த தலைவராக வர வேண்டியவருக்கு உண்மையான படித்த ஆளுமை இருக்க வேண்டும்.
அவர், சிங்கள பெரும்பான்மை மக்களின் உரிமைகள் மீறப்பட மாட்டாது என்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVex0.html
Geen opmerkingen:
Een reactie posten