தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக் கேட்டிருப்போம்.
ஆனால் மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மல் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான்.
இவ்வாறு வெந்நீரை தினமும் காலையில் அருந்துவது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறப்படுகிறது.
· உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர், வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்கவைத்து கொள்ள உதவும்.
· கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு, தொண்டைகட்டும் போது வெந்நீரை குடிப்பது உடலுக்கு இதமாக இருக்கும்.
· வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.
· டீன் ஏஜ் பெண்களையும், ஆண்களையும் தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.
· அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும்.
· வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.
· மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.
· உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதாக உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.
|
Geen opmerkingen:
Een reactie posten