தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 oktober 2014

சிறந்த ஜனநாயக செயற்பாட்டாளர் என்ற அடிப்படையிலேயே விக்னேஸ்வரனுக்கு அழைப்பு

இளைஞர்களை இலக்கு வைத்து வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது: நாமல் ராஜபக்ச
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 02:18.40 AM GMT ]
இளைஞர்களை இலக்கு வைத்து வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்.
நாட்டின் பொருளாதார நன்மைகள் மெது மெதுவாக இளைஞர்களை சென்றடைந்து கிராமம் அபிவிருத்தி அடையக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
கிராமத்தைச் சேர்ந்த பலர் வேலையில்லாப் பிரச்சினை குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து ஜனாதிபதியிடம் அறிவித்திருந்தேன். கிராம மக்களின் நாடித் துடிப்பை அறிந்த தலைவர் என்ற ரீதியில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தை சிறந்த முறையில் சமர்ப்பித்துள்ளார்.
கிராமத்தை மையமாகக் கொண்ட தொழில் வாய்ப்பு உருவாக்கமே ஜனாதிபதியின் திட்டமாக அமைந்துள்ளது.
இளம் முயற்சியான்மையாளர்களை உருவாக்கும் நோக்கில் இந்த வரவு செலவுத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் அரசியல்வாதிகள் இளைஞர்களை கிளர்ச்சியாளர்களாகவே நோக்கினர்.
ஜனாதிபதி ஐந்து லட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிராம பொருளாதாரத்தை வலுப்படுத்தி அதன் ஊடாக நாட்டை மேம்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கம் என அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமால் ராஜபக்ச வார இறுதி பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXms6.html
பாப்பரசரின் விஜயம்: பொலிஸ் அதிகாரிகளும் கத்தோலிக்க சபையினரும் சந்திக்கவுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 02:33.05 AM GMT ]
இலங்கையின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளும் கத்தோலிக்க தேவாலய பிரதிநிதிகளும் அடுத்த வார முற்பகுதியில் சந்திக்கவுள்ளனர்.
புனித பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு குறித்து ஆராயும் முகமாகவே இந்த சந்திப்பு நிகழவுள்ளது.
பாப்பரசரின் விஜயத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதியன்று வத்திக்கான் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படவேண்டும்.
இதில் பாதுகாப்பே மிகமுக்கிய பிரச்சினையாக உள்ளது என்று கத்தோலிக்க தேவாலய தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் ஜனாதிபதி தேர்தல் ஜனவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டால் பாப்பரசரின் விஜயம் என்னவாகும் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszARaKXms7.html
சிறந்த ஜனநாயக செயற்பாட்டாளர் என்ற அடிப்படையிலேயே விக்னேஸ்வரனுக்கு அழைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 02:42.26 AM GMT ]
இந்தியாவின் சென்னையில் சிவில் உரிமைகளுக்கான பொதுமக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள சொற்பொழிவு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பங்கேற்பார் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஒன்றியத்தின் நடவடிக்கையாளர் கே.ஜி.கண்ணபிரான் மற்றும் பொதுச்செயலாளர் வி.சுரேஸ் ஆகியோர் இது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
ஜனநாயகம், அரசியல், பொருளாதாரம் தொடர்பான தெளிவு, நீதித்துறையில் அனுபவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே விக்னேஸ்வரனை தமது நிகழ்வுக்கு அழைத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விக்னேஸ்வரன், சட்டத்துறையில் சிறப்பான செயற்பாட்டாளர் என்ற வகையில் அவரின் பெறுமதியை கருத்திற் கொண்டே தமது நிகழ்வுக்கு தாம் அழைப்பு விடுத்ததாக ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் விக்னேஸ்வரன், தரப்பில் இருந்து இன்னும் நிகழ்வில் பங்கேற்பதற்கான உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை. அதேநேரம் அவர் புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பாரா? என்பது தொடர்பிலும் இன்னும் தெளிவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmty.html

Geen opmerkingen:

Een reactie posten