தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 oktober 2014

வட, கிழக்கு காணிப் பிரச்சினைகளை தீர்க்க விசேட மத்தியஸ்த சபை

ஜனாதிபதித் தேர்தல்: தொகுதி அமைப்பாளர்களுக்கு 50 இலட்சம் வழங்கும் மஹிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 01:46.21 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆளும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு முதல் கட்டத்தில் 50 லட்ச ரூபா பணம் வழங்கப்பட உள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதி அமைப்பாளர்களுக்கு ஏற்கனவே இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் தேர்தல் பற்றிய அறிவிப்பு விடுக்கப்பட்ட உடன் பிரச்சாரப் பணிகளை ஆரம்பிப்பதே ஆளும் கட்சியின் திட்டமாகும்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தொகுதி அமைப்பாளர்களுக்கு தலா ஒரு கோடி ரூபா பணம் வழங்கத் தயார் என அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
ஆளும் கட்சி மிகவும் பிரமாண்டமான அடிப்படையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARaKXms3.html
வரவு செலவுத்திட்டத்தில் அச்சுப்பிழைகள்: ஏற்றுக்கொள்ளும் இலங்கை அரசு
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 02:04.59 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பத்தாவது வரவு செலவுத்திட்டத்தில், பல அச்சுப்பிழைகள் காணப்பட்டமையை பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனநாயகக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்த அச்சுப்பிழைகள் குறித்து நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் அமுனுகம, வரவு செலவுத்திட்டத்தின் அரச நிறுவனங்களுக்கான ஐந்தொகையில் கணக்கீட்டு தொகைகள் பிழையாக அச்சிடப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொண்டார்.
இலங்கை வங்கிக்கான 5000 மில்லியன் ரூபாய்கள் என்பது 5000 பில்லியன் என்று பிழையாக அச்சிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.
எனினும் வரவு செலவுத்திட்ட சுருக்கம் ஆங்கிலத்தில் மாத்திரமே அச்சிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARaKXms4.html
வட, கிழக்கு காணிப் பிரச்சினைகளை தீர்க்க விசேட மத்தியஸ்த சபை
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 02:07.27 AM GMT ]
வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள சுமார் 140,000 காணிப்பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க விசேட மத்தியஸ்த சபைகள் நிறுவுவப்படவுள்ளன.
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழ் நீதியமைச்சு இதற்கான யோசனையை முன்வைத்துள்ளது.
அமைச்சரவைக்கு இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் 13 சமூக மத்தியஸ்த சபைகளும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் 39 சபைகளும் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 600 மத்தியஸ்தர்கள் சேவையாற்றுகின்றனர். எனினும் அவை எவ்வித அதிகாரங்களும் இன்றி செயற்படுகின்றன.
இந்தநிலையில் விசேட மத்தியஸ்த சபைகளுக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszARaKXms5.html

Geen opmerkingen:

Een reactie posten