இந்தியாவின் சென்னையில் சிவில் உரிமைகளுக்கான பொதுமக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள சொற்பொழிவு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பங்கேற்பார் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஒன்றியத்தின் நடவடிக்கையாளர் கே.ஜி.கண்ணபிரான் மற்றும் பொதுச்செயலாளர் வி.சுரேஸ் ஆகியோர் இது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
ஜனநாயகம், அரசியல், பொருளாதாரம் தொடர்பான தெளிவு, நீதித்துறையில் அனுபவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே விக்னேஸ்வரனை தமது நிகழ்வுக்கு அழைத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விக்னேஸ்வரன், சட்டத்துறையில் சிறப்பான செயற்பாட்டாளர் என்ற வகையில் அவரின் பெறுமதியை கருத்திற் கொண்டே தமது நிகழ்வுக்கு தாம் அழைப்பு விடுத்ததாக ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் விக்னேஸ்வரன், தரப்பில் இருந்து இன்னும் நிகழ்வில் பங்கேற்பதற்கான உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை. அதேநேரம் அவர் புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பாரா? என்பது தொடர்பிலும் இன்னும் தெளிவில்லை.
தொடர்புடைய செய்தி- விக்னேஸ்வரனை மோடியுடன் சந்திக்க வைக்க அதிகாரிகள் முயற்சி
http://www.tamilwin.com/show-RUmszARaKXmty.html
Geen opmerkingen:
Een reactie posten