[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 12:04.23 AM GMT ]
இதில். அரசாங்க அமைச்சர்கள் உள்ளடங்கவுள்ளனர். எனினும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள அனைத்து நாடாளுமன்றக் குழுவின் 131வது அமர்வில் 650 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை பங்கேற்பர்.
இதில் 75 சபாநாயகர்களும் பிரதி சபாநாயகர்களும் அடங்குகின்றனர்.
எனினும் இலங்கையிலிருந்து குறித்த அமர்வில் பங்குகொள்பவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnu5.html
கப்பம் பெற்ற இரண்டு படைவீரர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 12:11.17 AM GMT ]
இரகசிய பொலிஸார் எனத் தெரிவித்து கொழும்பு, கொம்பனித்தெருவில் உள்ள வீடுகளில் கப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் படையதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர் எனவும் மற்றையவர் இராணுவத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் கஞ்சா போதைப்பொருள் மீட்டதாக வழக்குத் தொடர உள்ளதாகவும், அவ்வாறு வழக்குத் தொடராமல் இருக்க பணம் வழங்குமாறும் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர்களை கொம்பனித்தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று கோட்டை நீதவான் திலின கமகே எதிரில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 13ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnu6.html
கிறிஸ் நோனிஸ் வெற்றிடத்திற்கு சானக தல்பாஹேவா நியமனம்!
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 12:23.10 AM GMT ]
தம்மை அமெரிக்காவில் வைத்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தாக்கியதை அடுத்து கிறிஸ் நோனிஸ் பதவிவிலகினார்.
இந்தநிலையில் குறித்த பதவிவிலகல் தொடர்பாக பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் அதனை நோனிஸ் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவரின் பதவிவிலகலை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
தற்காலிக அடிப்படையில் பதில் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தல்பஹேவாவிற்கு பணிகளை பொறுப்பேற்றுக்கொள்ள உடனடியாக லண்டன் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய வெளிவிவகார அமைச்சு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnu7.html
Geen opmerkingen:
Een reactie posten