[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 12:31.09 AM GMT ]
கடந்த மாதம் 28ம் திகதி சுகததாச அரங்கில் நடைபெற்ற பொதுபல சேனா மாநாட்டில, ஜமயதுல் உலமா சபை, சூரா சபை மற்றும் முஸ்லிம் பேரவை ஆகியனவற்றின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் உலமா சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுபல சேனா போன்று ஏனைய இன மத சமூகங்களை இழிவுபடுத்தும் வேறும் அமைப்புக்கள் கிடையாது.
சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயம் போன்ற சிரேஸ்ட மானுட பண்புகளை போற்றும் இஸ்லாமிய மார்க்கத்தை பொதுபல சேனா இழிவுபடுத்தி வருகின்றது.
பொதுபல சேனாவின் இந்த நடவடிக்கைகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஜமயதுல் உலமா சபை அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் கடும்போக்குவாத அமைப்பு என பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
புலனாய்வுப் பிரிவு பாதுகாப்பு தரப்பு போன்றன முஸ்லிம் கடும்போக்கு வாதம் நாட்டில் கிடையாது எனத் தெரிவித்துள்ள நிலையில் ஜமயதுல் உலமா சபை ஒர் கடும்போக்குவாத அமைப்பு என பொதுபல சேனா சுமத்தி வரும் குற்றச்சாட்டு நகைப்பிற்குரியது.
ஜமயதுல் உலமா சபை ஒருபோதும் வன்முறைகளைத் தூண்டியதில்லை தூண்டப் போவதுமில்லை.
முஸ்லிம் சமூகத்தை ஆத்திரமூட்டி அதன் மூலம் வன்முறைகளைத் தூண்ட சில பௌத்த பிக்குகள் முயற்சிக்கின்றனர்.
பொதுபல சேனா பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகள் மிகவும் இழிவான வகையில் அமைந்துள்ளது.
குருடர்களின் யானை பற்றிய விளக்கத்தைப் போன்று ஞானசார தேரர் குர்ஆன் தொடர்பில் கருத்துரைக்கின்றார்.
தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் பேரவை ஆகியன தொடர்பிலும் பொதுபல சேனா பிழையான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஜமயதுல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnvy.html
பாகிஸ்தானிய, ஆப்கானிஸ்தானிய அகதிகள் தொடர்ந்தும் நாடு கடத்தப்படுகின்றனர்!
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 12:46.23 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தகவல்களின்படி கடந்த வெள்ளிக்கிழமையும் கணிசமான தொகையினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதில் 40 ஆப்கானிஸ்தானிய அகதிகளும்ஈ 21 பாகிஸ்தானிய அகதிகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை 312 அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதில், 38 ஆப்கானிஸ்தானிய அகதிகளும், 274 பாகிஸ்தானிய அகதிகளும் உள்ளடங்குகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnv0.html
Geen opmerkingen:
Een reactie posten