தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

ராஜபக்ச குடும்பத்திற்கு பால் மாடுகளைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது: பசில்!

சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனிப்பு எதுவுமில்லை!- சிறை அதிகாரி
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 12:32.51 AM GMT ]
சிறையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏனைய கைதிகளை விட மிகமுக்கியமானவர்களுக்கான உபசரிப்பு இடம்பெறுவதாக வெளியான தகவல்களை கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஜெயலலிதாவும் ஏனைய கைதிகளை போன்றே உபசரிக்கப்படுகிறார் என்று பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ஏனைய கைதிகளை போன்றே பொது தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவை பொறுத்தவரை இவர் கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்படவில்லை. எனவே அவருக்கு சாரிகள் அணிவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் வைத்தியர்களின் ஆலோசனைப்படி சாதாரண உணவுகளையே உண்பதாகவும் அந்த அதிகாரி  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறைத்துறை அதிகாரி ஜெய்சிம்ஹா மேலும் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு வி.ஐ.பி. சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. பரப்பன அக்ரஹாரா சிறையில் மற்ற சாதாரண கைதிகள் எப்படி நடத்தப்படுகின்றனரோ அதைப்போலவே தான் ஜெயலலிதாவும் நடத்தப்படுகிறார்.
சிறையில் ஜெயலலிதா ஜெயில் அதிகாரிகளிடம் மிகவும் அமைதியாகவே நடந்து கொண்டார்.
டாக்டர்களின் பரிந்துரைப்படி இரும்பு கட்டிலை தவிர வேறெந்த வசதியையும் அவர் வேண்டும் என்றும் கேட்கவில்லை.
சாதாரண கைதிகளுக்கு கூட தொலைக்காட்சி பெட்டி வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில் அதைக்கூட ஜெயலலிதா கேட்கவில்லை.
சிறையில் அவருக்கு டாக்டர்கள் பரிந்துரைப்படி பிரவுண் பிரெட், பால், பிஸ்கட்டுகள், பழங்கள் மற்றும் சப்பாத்திகளே வழங்கப்பட்டு வருகிறது.
அதுவும் அவர் விருப்பத்தின் பேரில் மட்டுமே. இதுதவிர படிப்பதற்கு நியூஸ் பேப்பர்களும் கொடுக்கப்படுகின்றன.
அதேவேளை, வெளிநபர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. சந்திக்க விரும்பும் நபர்கள் குறித்து ஜெயலலிதாவுக்கு தகவல் அளித்தாலும், யாரையும் சந்திக்க அவர் இன்று வரை ஒப்புதல் அளிக்கவில்லை என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfw7.html

ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதில் பயனில்லை!- ஆளும் கட்சி எம்.பி
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 08:01.03 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை வழங்கினாலும் அது பயனில்லை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நானும் ஆலோசனை வழங்குவேன். எவரும் கணக்கில் எடுப்பதில்லை. இறுதியில் ஓரிரு ஆலோசனை நடக்கும்.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு கொள்கை என்று ஒன்றில்லை. பதவியை காப்பற்ற வேண்டும் என்ற நிலையில் அவர் செயற்பட்டு வருகிறார் எனவும் ரஜீவ விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVep5.html

ராஜபக்ச குடும்பத்திற்கு பால் மாடுகளைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது: பசில்
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 01:21.13 AM GMT ]
ராஜபக்ச குடும்பத்திற்கு பால் மாடுகளைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை பால் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நெஸ்ட்லே நிறுவனம் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
என்னைப் போன்றே எனது தந்தையும் ஒர் பால் பண்ணையாளர்.
எனக்கும் எனது குடும்பத்தாரிற்கும் தோட்டங்கள், ஹோட்டல்கள் மற்றும் கம்பனிகள் காணப்படுவதாக சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எவர் என்ன சொன்னாலும் எனக்கு சில பசு மாடுகள் மட்டுமே காணப்படுகின்றன.
நானும் எனது தந்தையும் உங்களைப் போன்றே பால் பண்ணையாளர்கள்.
எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அந்த தோட்டம் இருக்கின்றது.  ஹோட்டல் இருக்கின்றது. அந்த கம்பனி இருப்பதாக தெரிவித்தாலும் எங்களுக்கு அவ்வாறு சொத்துக்கள் இல்லை.
இலங்கையை பசும்பாலில் தன்னிறைவு அடையச் செய்யும் முயற்சிக்கு பாற்பண்ணையாளர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்பு அளப்பரியது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfxz.html

Geen opmerkingen:

Een reactie posten