ஈராக் மற்றும் சிரியா பகுதிகளை இணைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர்.
அங்கு வாழும் மைனாரட்டிகளான யாஷிடி மக்களை மதம் மாற கட்டாயப்படுத்துகின்றனர்.
மதம் மாற மறுப்பவர்களை கொன்று குவித்து வருகின்றனர், பலர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
கடந்த ஜூன்மாதம் முதல் இது வரை அங்கு 5500 பேரை தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளதாக ஐ.நா.வின் ஈராக் பிரதிநிதி நிகோலே மிலாடெனோவ் தெரிவித்துள்ளார்.
5 பேரின் தலையை வெட்டி சாய்த்த ஐ.எஸ்.ஐ.எஸ்
சிரியாவில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேருக்கு தலையை வெட்டி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர் .
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோபானி நகருக்கு அருகே இக்கொடூர தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிரியா மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கும், குர்திஷ் படையினருக்கும் நடந்த மோதலில், இவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் எதற்காக இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து விபரங்கள் தெரியவரவில்லை என சிரியா மனித உரிமைகள் அவதான நிலையத்தை சேர்ந்த ரமி அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
http://newsonews.com/view.php?20260222222PPBdcceaymOJJ4ceeM6AAbbdcccMQCdbdd3lAA004355nZ3e044E8oo23
|
Geen opmerkingen:
Een reactie posten