[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 08:29.13 AM GMT ]
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை விடுமுறைக்கால நீதிபதி ரத்னகலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். அவரைப் பார்த்த நீதிபதி, நீங்கள்தான் அரசு சார்பில் ஆஜராகப் போகிறீர்களா என்று கேட்டார்.
இதற்கு பவானி சிங்கும் ஆம் என்று கூறிவிட்டு, அதற்கான உத்தரவை நீதிபதியிடம் அளித்தார்.
ஜாமீன் வழங்குவது குறித்து நீங்கள் ஏதும் ஆட்சேபனை செய்ய விரும்புகிறீர்களா என்று நீதிபதி, பவானி சிங்கிடம் கேட்டதற்கு, அவரும் ஆமாம் என்று தெரிவித்தார்.
ஆனால் நீதிபதி ரத்னகலாவோ, இந்த வழக்கை ரெகுலர் பெஞ்ச் விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து அடுத்த வாரம் வரையில் ஜெயலலிதா சிறையில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே ராம் ஜெத்மலானி தலைமையில் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் அவசர ஆலோசனை நடத்தினர்.
இதன் பிறகு கர்நாடக ஹைகோர்ட் பதிவாளர் ஜெனரல் தேசாயிடம், அதிமுக வக்கீல் செந்தில் ஒரு மனு அளித்தார். அதில், ஜாமீன் வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்.
நீதிபதி ரத்னகலா விசாரிக்க தயாரில்லாத நிலையில், வேறு ஒரு நீதிபதியை நியமித்து இன்றே வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்கப்பட்டது.
இந்த மனுவை ஏற்பதா, வேண்டாமா என்பதை கோர்ட் பதிவாளர் முடிவு செய்வதாக கூறினார்.
இந்நிலையில், மனுவை வாபஸ் வாங்குமாறு ராம் ஜெத்மலானி அறிவுறுத்தியதையடுத்து மனுவை வழக்கறிஞர் செந்தில் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.
வீணாக ஹைகோர்ட் தலைமை நீதிபதியின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று ராம் ஜெத்மலானி நினைத்திருக்கலாம் என்று அதிமுக தரப்பு கூறுகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக வக்கீல் தரப்பு ஆலோசித்து வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfp7.html
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப்படும்!- ஜனநாயகக் கட்சி
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 08:47.19 AM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதீதமான அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரிகளை வழங்க விரும்பும் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப்படும் என அந்த கட்சியின் செயலாளர் ஆனந்த மானவடு தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பலவற்றுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பொது வேட்பாளர் யார் என்ற ஸ்திரமான முடிவுக்கு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் மானவடு குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfqy.html
இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் போக்கில் மாற்றம்!- ஜனாதிபதி
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 08:54.13 AM GMT ]
முக்கியமாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இதனை தான் உணர்ந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடையில், ஜோன் கெரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் அவை வெற்றிகரமாக அமைந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அவர்கள் தனக்கு அறிவித்தனர் என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfqz.html
Geen opmerkingen:
Een reactie posten