[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 07:54.30 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்று பரவலாக எதிர்வு கூறப்படுகின்றது.
இந்நிலையில் பொலிசார், இராணுவத்தினர், அரச ஊழியர்களின் ஆதரவுடன் கள்ள வாக்கு கலாசாரத்தை கட்டவிழ்த்துவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி, அடக்கிவிட்டு வெற்றியைப் பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஏதுவாக பொலிஸ் திணைக்களத்தில் புதிதாக ஐந்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
கொழும்பு தெற்கு எஸ்.எஸ்.பி பிரேமலால் ரணகல, களனி எஸ்.எஸ்.பி. வெடிசிங்க, மாத்தறை எஸ்.எஸ்.பி. தேசபந்து தென்னகோன், கொழும்பு மத்தி பாலித சிரிவர்தன, மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண ஆகிய ஐவருக்கே இவ்வாறு பதவி உயர்வு கிட்டவுள்ளது.
இவர்கள் ஐவரும் அரசாங்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதுடன், கடந்த காலங்களில் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகளை மூடி மறைப்பதில் ஒத்தாசை புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரத்தினபுரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் மெக்சி புரொக்டர், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் மான்னாயக்க, பேலியகொடை பகுதிக்குப் பொறுப்பான என்.ஜி. குலரத்தின, ரத்தினபுரிக்குப் பொறுப்பான ரஞ்சித் பத்மசிரி, தங்காலைக்குப் பொறுப்பான மெக்கர்தி பெரேரா ஆகிய பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளது.
இவ்வாறாக தமது கட்டளைக்கேற்ப செயற்படும் பொலிஸ் உயரதிகாரிகளைக் கொண்டு வாக்கு மோசடிகள் மூலம் தேர்தல் வெற்றியைப் பெற அரசாங்கம் திட்டமிடுவதாக ஐ.தே.க. வும் குற்றம் சாட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVep3.html
ஊவாத் தேர்தல் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை: விக்ரமபாகு
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 07:57.17 AM GMT ]
மொனராகலை பாணியில் அரசாங்கம் தேர்தல்களை வெற்றியீட்ட முயற்சிப்பதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
இயலுமானவரையில் இழி செயல்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டே சிரமப்பட்டு ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியது.
ஊவாவில் பின்பற்றிய வழிமுறைகளைப் எதிர்வரும் தேர்தல்களில் பின்பற்ற அரசாங்கம் முயற்சிக்கின்றது.
டிபென்டர் வாகனங்களின் மூலம் வெளியாட்களை பிரச்சாரத்திற்கு களமிறக்கி, தேவையற்ற அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தேவையான அதிகாரிகளை கடமைக்கு அமர்த்தி, பிரதேசசபை உறுப்பினர்கள் முதல் அமைச்சர்கள் வரையில் அனைவரையும் ஈடுபடுத்திய அரசாங்கம் ஊவாவில் பிரச்சாரம் செய்தது.
ஊவா தேர்தல் எவ்வாறு வெற்றி கொள்ளப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. ஊவாவில் இன்னமும் தேர்தல் வன்முறைகள் முடிவுக்குக்கொண்டு வரப்படவில்லை.
பௌத்த சிங்கள மக்களும் வாழும் பகுதிகளில் மொனராகலை பாணியிலும், தமிழ் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் பதுளை பாணியிலும் தேர்தல்களில் வெற்றியீட்ட அரசாங்கம் முயற்சிக்கின்றது.
18ம் திருத்தச் சட்டத்தின் அமைவாக ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் உச்ச நீதிமன்றம் முடியும் என சொல்லக்கூடும். சட்டத்தை ஒடுக்கி ஆட்சி செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஹிட்லரும் இதேவிதமான ஓர் ஆட்சிமுறைமையே பின்பற்றினார் என விக்ரமபாகு கருணாரட்ன சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVep4.html
Geen opmerkingen:
Een reactie posten