[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 09:54.27 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சியின் செயற்பாட்டாளர்களை மௌனமாக்குவதற்காக அண்மையில் சில தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை சம்பந்தமான கூட்டம் ஒன்று நடைபெறவிருந்தது. கூட்டம் நடைபெறவிருந்த வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் பெற்ரோல் குண்டும் வீசப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் எதிர்க்கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
பலமான உதவிகளுடன் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து அரசாங்கம் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல் அதிகரிக்கக் கூடும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfu5.html
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் நுவரெலியா கல்வி வலயம் எதிர்பாராத வளர்ச்சி! (மலையக செய்திகள்)
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 10:48.27 AM GMT ]
இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
நுவரெலியா கல்வி வலயத்தில் கடந்த வருடம் புலமைப் பரிசில் பெறுபேறுகளை ஒப்பிடும்போது தமிழ் பாடசாலைகளில் 122 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்திருந்தனர்.
ஆனால் இவ்வருடம் அதனை விட அதிகரித்துள்ளது எனலாம். கோட்டம் 1 இல் 39 பாடசாலைகளில் 34 மாணவர்களும், கோட்டம் 2 இல் 42 பாடசாலைகளில் 72 மாணவர்களும், கோட்டம் 3 இல் 38 பாடசாலைகளில் 52 மாணவர்களும் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
மேலும் ஹோல்புறூக் தமிழ் வித்தியாலயத்தில் மாணவன் ஒருவன் 185 அதிக கூடிய புள்ளிகளை பெற்று நுவரெலியா கல்வி வலயத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
அதேபோல் இரண்டாம் இடத்தை நுவரெலியா கல்வி வலயத்தில் பெல்மோரல் பாடசாலை மாணவன் 184 புள்ளிகளை பெற்றுள்ளார்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் இருந்து தோற்றிய 103 மாணவர்களில் 19 பேர் வெட்டுப்புள்ளியான 157 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அதேபோல் கொட்டக்கலை தமிழ் வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 133 மாணவர்களில் 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அந்தவகையில் மத்திய மாகாணத்தில் புலமைப்பரிசில் பெறுபேறுகள் அதிகரிப்பதற்கு நுவரெலியா கல்வி வலயமும் முக்கிய பங்கு வகிக்கின்றது எனலாம்.
இவ்வாறான வெற்றிக்கு வழிசமைத்தவர்கள் நுவரெலியா கல்வி வலயத்தின் வலய கல்விப் பணிப்பாளர் திரு.எம்.ஜி.அமரசிறி பியதாஸ, முன்னாள் நுவரெலியா கல்வி வலய மேலதிக கல்விப் பணிப்பாளரும் தற்போதைய ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளருமான திரு. ராஜசேகரம், மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஏக்கநாயக்க, மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு.சதீஸ், மத்திய மாகாண ஆரம்பக்கல்வி பணிப்பாளர் ஆனந்தசிறி,
மத்திய மாகாண உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி.அமுதவள்ளி, நுவரெலியா கல்வி வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.சோமசுந்தரம், நுவரெலியா கல்வி வலய அபிவிருத்தி திட்ட பணிப்பாளர்கள், சேவை கால ஆசிரியர் ஆலோசகர்கள், அதிபர்கள், கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகிய அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.
மேலும் அரச சார்பற்ற நிறுவனங்களான வேல்ட்விசன்,தலவாக்கலை என்.எஸ்.பி வங்கி போன்றனவும் எமக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்தன. இனிவரும் காலங்களிலும் இவர்கள் எமக்கு பூரண ஒத்துழைப்பை நல்கி மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும்
கடந்த காலங்களில் பெற்றொர்கள் தனது பிள்ளைகள் புலமைப் பரிசில் பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றமைக்காக தண்டித்துள்ளதையும் பல்வேறு வகைகளில் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுத்தும் உள்ளனர்.
இதனால் பிள்ளைகள் மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்பட்டன. கல்வி கற்றலில் வெறுப்பத் தன்மையும் காணப்பட்டு அவர்கள் கற்றலை வெறுத்து ஒதுக்க கூடிய சூழ்நிலைகளும் ஏற்பட்டன.
எனவே அவ்வாறான தண்டனைகளை பிள்ளைகளுக்கு வழங்காதீர்கள் இந்நிலை மாறவேண்டும் இலங்கையில் கல்வி சுற்று நிரூபனத்தின் படி புலமைப் பரிசில் பரீட்சையில் 70 க்கு மேல் புள்ளிகளை பெறும் மாணவர்கள் அனைவரையும் சித்தியடைந்தவர்களாக கருதப்பட வேண்டும்.
இவர்களுக்கு அரசாங்கத்தினூடாக சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன என்றார்.
புதிதாக கட்டப்பட்ட வாடிவீடு தலவாக்கலை லிந்துலை நகர சபையிடம் கையளிப்பு
மேல் கொத்மலை நீர்தேக்கம் அமைக்கப்படும் போது உடைக்கப்பட்ட தலவாக்கலை வாடி வீடு 650 இலட்சம் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை வாடிவீட்டை தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் அசோக சேபாலவிடம், இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சபேந்திரநாத் பெர்ணாண்டோவினால் இன்று கையளிக்கப்பட்டது.
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் அருகில் கட்டப்பட்டுள்ள இந்த வாடிவீட்டில் சகல வசதிகளும் உள்ள 14 அறைகளும், பிரதான மண்டபம் மற்றும் வாகன நிறுத்துமிடம் என பல வசதிகள் உள்ளன.
நுவரெலியாவுக்கு செல்லும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இந்த வாடிவீடு அமைக்கப்பட்டுள்ளன.
இன்று கையளிக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு மின்சார சபை உத்தியோகத்தர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
தலவாக்கலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்விக் கண்காட்சி
1989ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட சிறுவர் உரிமைகள் சமவாயம் 25 வருடங்களாவதை முன்னிட்டு தலவாக்கலை ட்ரூப் தோட்ட முன்பள்ளியில் கண்காட்சி நிகழ்வொன்று நடைபெற்றது.
ஆசிரியை ஜி.புனிதமலர் ஏற்பாட்டில் முன்பள்ளி அபிவிருத்தி சபை சிறுவர் கழக ஏற்பாட்டில் இன்று கல்வி கண்காட்சி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரிடோ நிறுவன வெளிக்கள இணைப்பாளர் கே.சந்திரசேகரன், தோட்ட அதிகாரி நிஷான் இலங்ககோன், உதவி அதிகாரி சுதர்ஷன், இணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பொயிஸ்டன் தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பொயிஸ்ட்டன் தோட்ட மக்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினம் பொயிஸ்டன் தோட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாது தோட்ட தொழிற்சாலையின் அருகாமையில் அமர்ந்து இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த தோட்ட பெண் தொழிலாளர்களை தோட்ட முகாமையாளர் தகாத வார்த்தையில் பேசியதன் காரணமாகவும், குறித்த தோட்டத்திற்கான வீதியை புனரமைப்பதற்கான கொண்டு வந்த பொருட்களை திருப்பி அனுப்பியதன் காரணமாகவே இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பொயிஸ்டன் தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எனவே பொயிஸ்டன் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென பொயிஸ்டன் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த ஆர்பாட்டம் குறித்து பொயிஸ்டன் தோட்ட முகாமையாளர் மொகமட் யாசீர் பாக்கீர்மாக்கரிடம் தொடர்பு கொண்டு வினவியபோது சில சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக குறித்த தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfu6.html
Geen opmerkingen:
Een reactie posten