பிரித்தானியாவில் இருந்து சிரியாவுக்கு ஜிகாதியாக சென்ற மகளை மீண்டும் வந்துவிடுமாறு கூறி, அவரது தாய் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த யூஸ்ரா ஊசேன்(வயது 15) கடந்த 8 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்திலிருந்து ஹீத்ரு விமான நிலையத்திற்கு சென்று மர்ம நபர் ஒருவருடன் சிரியா நாட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து இவரின் தாயார் சாஃபியா உசேன், தனது மகளை திரும்பி வரும்படி அழுது கெஞ்சியுள்ளார்.
இவர் சிரியா எல்லை மேற்கு துருக்கியில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இவரின் தாயார் சாஃபியா இவர் மீது பாசம் மிகுந்துள்ளதாகவும், இவரின் சகோதரர்கள் இவர் இல்லாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தன் மகள் இல்லாத வாழ்க்கையை கடினமாக உணர்வதாகவும், பொலிசார் மிக வேகமாக செயல்பட்டு தன் மகளை மீட்டு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
http://world.lankasri.com/view.php?20055nZZeec44M6AA4240066022ee044JJOmmbbdccAAlT12222EE8ooaaeccccMQQddbddPPBdd23
| ஐஎஸ்ஐஎஸ் மீது குண்டுமழை பொழிந்த பிரிட்டன்! புகைப்படங்கள் வெளியானது (வீடியோ இணைப்பு) |
| [ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 07:10.17 மு.ப GMT ] |
உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது முதன்முறையாக பிரிட்டன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவரும் வேளையில், முதன் முறையாக பிரிட்டன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த விமானப்படை, தீவிரவாதிகளின் இலக்குகளை நோக்கி நேற்று சக்திவாய்ந்த குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசியது.
இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் பல இலக்குகள் தரைமட்டமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாக்குதல்களை பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் மைக்கேல் போலன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் முதன்முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
http://world.lankasri.com/view.php?20055nZZeec44M6AA3240066022ee044JJOmmbbdccAAlTx2222EE8ooaaeccccMQQddbddPPBdd23
| பெண்கள் உட்பட 9 பேரின் தலையை துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ் |
| [ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 05:59.33 மு.ப GMT ] |
பெண்கள் உட்பட 9 பேரின் தலையை துண்டித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளைப் பிடித்துக்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அப்பகுதிக்கு ஐ.எஸ். (இஸ்லாமிக் மாநிலம்) என்று பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.
மேலும், அங்குள்ள குர்திஷ் மக்கள் வாழ்ந்து வரும் பகுதிகளை கைப்பற்றி அவர்களை மதம் மாற்றம் செய்கின்றனர்.
அவர்களது கட்டளைக்கு செவிசாய்க்காத மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மூன்று பெண்கள் உட்பட 9 பேரின் தலையை துண்டித்து கொலை செய்ததுடன், இறந்தவர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர்.
இத்தகவலை சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் சிரியாவில் உள்ள கோபேன் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
http://world.lankasri.com/view.php?20055nZZeec44M6AA3240066022ee044JJOmmbbdccAAlTd2222EE8ooaaeccccMQQddbddPPBdd23
|
|
|
Geen opmerkingen:
Een reactie posten