[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 07:19.47 AM GMT ]
டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். பல நாடுகளிலும் உள்ள பயங்கரவாதம், இப்போது கனடாவிலும் அதன் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
உலகில் பயங்கதவாத நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்வது அதிருப்தி அளிக்கின்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் உள்ளிட்ட கனேடிய அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுபல நாடுகள் தலைவர்கள் மாநாட்டினை பிரதமர் ஹார்பர் புறக்கணித்திருந்தார்.
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காத்திரமான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனேடிய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஜனாதிபதி கண்டித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKWex2.html
நாமல் ராஜபக்ஷ பேரால் மோசடி: அக்கரைப்பற்று நபருக்கு பிணை
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 07:34.24 AM GMT ]
சுமார் இரண்டரை லட்சம் ரூபா மோசடி செய்திருந்தத குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது. வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு எதிர்வரும் 27ம் திகதி அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம், சுற்றுலா ஹோட்டல்களுக்கான அனுமதிப் பத்திரம் போன்றவற்றை வாங்கித் தருவதாக ஏமாற்றியே பணமோசடி செய்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARXKWex3.html
ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலா? விளக்கம் கோரும் கத்தோலிக்க திருச்சபை- அனைத்து தேர்தல்களும் ஒரே நாளில் நடத்த பெப்ரல் ஆலோசனை
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 07:42.06 AM GMT ]
புனித பாப்பரசர் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதால், கத்தோலிக்க திருச்சபை இந்த கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பு பேராயர் வணக்கதிற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை எனவும் கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் வருகை தரும் ஜனவரி மாதம் இலங்கையில் தேர்தல் நடத்தப்பட உள்ளமை தொடர்பில் திருச்சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால், தேர்தல் தொடர்பான விடயத்தை கத்தோலிக்க திருச்சபை மீண்டும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு நாட்டிலாவது தேர்தல்கள் நடத்தப்படும் சந்தர்ப்பங்களில் புனித பாப்பரசர் அந்நாடுகளுக்கு விஜயம் செய்வது சிறந்ததல்ல என இலங்கை கத்தோலிக்க திருச்சபை ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து தேர்தல்களும் ஒரே நாளில் நடத்த பெப்ரல் ஆலோசனை
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான கண்காணிப்புப் பணியகம் இது தொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதன் மூலம் ஆறாயிரம் மில்லியன்கள் அளவில் வருடமொன்றுக்கு சேமிக்க முடியும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய நிலையில் வருடமொன்றுக்கு இரண்டு தேர்தல்கள் என்ற அளவில் தேர்தல் காய்ச்சல் தொற்றியுள்ளது.
இதன் காரணமாக அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களின் கவனம் பெரும்பாலும் தேர்தல்கள் தொடர்பில் செலுத்தப்படுகின்றது.
இதனால் நாட்டின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்களில் தொய்வு ஏற்படுகின்றது.
மேலும் பிரதேச வாரியாக தேர்தல்களை நடத்துவதால் அரச வளம், மனித வளம் வீணடிக்கப்படுவதுடன், தேர்தல் முறைகேடுகளுக்கும் வழியேற்படுகின்றது.
எனவே ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தினால் குறைந்த பட்சம் ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபா பணம் விரயமாவது தடுக்கப்படும்.
நாட்டின் அபிவிருத்திக்குச் செலவழிக்க வேண்டிய பொதுமக்களின் நேரமும் வீணடிக்கப்பட மாட்டாது என்றும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வரைபொன்றை அந்த அமைப்பு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடமும் கையளித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளரே தேர்தல் திகதியை அறிவிக்கவேண்டும்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் திகதியை தீர்மானிக்கவேண்டிய பொறுப்பும் உரிமையும் தேர்தல்கள் ஆணையாளருக்கே இருக்கவேண்டும் அதனை அரசாங்க அமைச்சர்கள் அறிவிக்கமுடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தல்களை ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை இன்று சந்தித்தபோது இது தொடர்பில் தமது கட்சியினர் தெளிவுப்படுத்தியதாக ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் அறிவிக்க முன்னரே அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவித்தலை விடுத்துள்ளனர்.
இது முற்றிலும் அரசியலமைப்புக்கு முரணான செயல் என்பதை தாம் சுட்டிக்காட்டியதாக திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜேவிபி செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினரும் இன்று தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்தனர்.
இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விடயத்தை தேர்தல்கள் ஆணையாளரிடம் தெளிவுப்படுத்தியதாக கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மாத்திரத்தில் தற்போதைய மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்துவிட்டார்.
இதன்பின்னர் கொண்டு வரப்பட்ட 18வது அரசியலமைப்பு சரத்தின்கீழ் மீண்டும் அவர் மூன்றாம் முறையாக ஜனாதிபதி போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை.
இதனை தாம் தேர்தல்கள் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டியதாக டில்வின் சில்வா குறிப்பிட்டார்
http://www.tamilwin.com/show-RUmszARXKWex4.html
வடக்கு மக்கள் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க செய்யும் முயற்சியில் ராஜபக்ஷவினர்: த இண்டிபெண்டன் இணையத்தளம்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 07:42.53 AM GMT ]
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 180 மில்லியன் ரூபாவை வடக்கு மக்களை தேர்தலை புறக்கணிக்க செய்து, ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை தடுத்து மகிந்த ராஜபக்ஷ அந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 745 மில்லியன் ரூபாவுக்கு மேல் பெறுமதியான கொடுக்கல் வாங்கல் ஒன்றுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது என இந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரிவினைவாத ஈழ கோரிக்கை இருக்கும் வரை நிறைவேற்று அதிகாரத்தை கைவிட போவதில்லை என தெரிவித்திருந்ததுடன் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகளின் தடையை நீக்கியதன் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரசிங்க இருப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.
இவ்வாறு குற்றம் சுமத்திய மகிந்த ராஜபக்ஷ தனி நாடு கோரி நிற்கும் பிரதான அமைப்பொன்றின் முக்கியஸ்தருடன் இந்த புதிய கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள உள்ளதாக த இண்டிபெண்டன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த முறை விடுதலைப் புலிகளுடனான கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள எமில் காந்தன் என்பவரை சந்திக்க சிங்கள பத்திரிகை ஒன்றின் உரிமையாளர் ஒருவரை பயன்படுத்தியது போல், ராஜபக்ஷவினர் இம்முறை கசினோ வர்த்தகரான ரவி விஜேரத்னவை இணைத்து கொண்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி விநியோகிக்கும் ஒப்பந்தத்தை ரவி விஜேரத்ன பெற்றிருந்தார்.
இதற்காக அவர் வேறு நிலக்கரி உற்பத்தியாளர்களிடம் இருந்து விலை மனுக்களை கோரியிருந்தார்.
சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்க வர்த்தகர்கள் விலை மனுக்களை சமர்பித்தனர். சாதகமான விலை மனுவை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று முன்வைத்தது.
எனினும் அரசாங்க அதிகார தரப்பினர் அழுத்தங்கள் காரணமாக ரவி விஜேரத்ன அந்த வர்த்தகத்தை தென் ஆபிரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதற்காகவே இந்த வர்த்தகம் தென் ஆபிரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பதாக கூறி அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தென் ஆபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ராமபோஷாவே குளோபல் ரிசோசஸ் என்ற இந்த தென் ஆபிரிக்க நிறுவனத்தின் உரிமையாளர்.
ராமபோஷா என்பவர் தென் ஆபிரிக்காவின் செல்வந்த குபேரர். 675 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை அவர் கொண்டுள்ளார்.
மேலே குறிப்பிட்ட தனிநாடு கோரும் பிரதான அமைப்பொன்றின் பிரதானியிடம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே சிறில் ராமபோஷாவின் நிறுவனத்திற்கு நிலக்கரி விநியோக உரிமை வழங்கப்பட்டது.
சிறில் ராமபோஷாவின் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இந்த பிரதானி பணியாற்றி வருகிறார். இந்த கொடுக்கல் வாங்கல்கள் மூலம் இந்த பிரதானியின் வங்கி கணக்கில் பெருந் தொகை பணம் வைப்புச் செய்யப்படும்.
கடந்த முறை கொடுக்கப்பட்ட பணத்தை விட பல மடங்கான இந்த பணமானது நீண்டகால வருமானம் பெறும் வழியாகவும் அமைந்துள்ளது.
இதனடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை மகிந்த ராஜபக்ஷவுக்கு பெற்று தருவதாக மேற்படி பிரதானி வாக்குறுதியளித்துள்ளார்.
இந்த கொடுக்கல் வாங்கல் காரணமாக ரவி விஜேரத்ன பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் விடுதலைப் புலிகளுக்கு விதித்திருந்த தடையை நீக்கியதுடன் அதற்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது அமைதியாக இருந்து வருவதுடன் தடையை மீண்டும் அமுல்படுத்தும் எந்த முனைப்புகளையும் அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை.
இதனால், இதனை அரசாங்கம் வேண்டும் என்றே செய்தது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருவதுடன் குறித்த கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முதலாவது கட்ட நடவடிக்கையாக இது இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற புலிகளுக்கு பணத்தை கொடுத்து எப்படி வழியை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது என்பதை மௌபிம பத்திரிகையின் உரிமையாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் விளக்கியுள்ளார்.
அவர் கூறுகையில்,
நான் எமில் காந்தனை, பசில் ராஜபக்ஷவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அப்போதில் இருந்து ஜனாதிபதித் தேர்தலில் புலிகளின் ஆதரவை மகிந்த ராஜபக்ஷவுக்கு எப்படி பெற்றுக்கொடுப்பது என்பது பற்றியே இவர்கள் பேசி வந்தனர்.
நான் எமில் காந்தனை, பசில் ராஜபக்ஷவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அப்போதில் இருந்து ஜனாதிபதித் தேர்தலில் புலிகளின் ஆதரவை மகிந்த ராஜபக்ஷவுக்கு எப்படி பெற்றுக்கொடுப்பது என்பது பற்றியே இவர்கள் பேசி வந்தனர்.
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெருங்கும் தருவாயில் மகிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்த புலிகள் தரப்பில் ஏதாவது செய்ய வேண்டும் என பசில் ராஜபக்ஷ, எமில் காந்தனிடம் கூறியதுடன் அவர்கள் கேட்கும் எதனையும் கொடுக்க தயார் என்றும் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்பட்டால், தென் பகுதி வாக்குகளால் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்றும் பசில் கூறியிருந்தார்.
மறுதினம் எங்களுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டீர்கள் தானே என்று எமில், பசிலிடம் கூறினார். எமக்கு படகுகள் சிலவற்றை கொள்வனவு செய்ய 180 மில்லியன் ரூபா தேவை என எமில் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பசில் ராஜபக்ஷ எந்த பிரச்சினையும் இல்லை பணத்தை எங்களால் தர முடியும் என்று தெரிவித்தார்.
அதற்கு மறுநாள் எமிலும் பசிலும் சந்தித்தனர். எமிலை சந்திக்க வந்த பசில் தன்னுடன் சில பயண பொதிகளை எடுத்து வந்திருந்தார்.
நான் இவற்றை தற்போது கூறுவதற்கு முன்னர் இந்த தகவல்களை 2007 ஆம் ஆண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளேன்.
என்னை கொலை செய்ய ராஜபக்ஷவினர் முயற்சித்து வருவதன் காரணமாகவே நான் தற்போது இந்த தகவல்களை வெளியிடுகிறேன்.
புலிகளின் உறவை உறுதிப்படுத்திக் கொள்ளவே பசில் ராஜபக்ஷ அப்போது 180 மில்லியன் ரூபாவை வழங்கினார் என டிரான் அலஸ் மேலும் தெரிவித்ததாக த இண்டிபெண்டன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKWex5.html
Geen opmerkingen:
Een reactie posten