தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

கர்ப்பிணிகளுக்கும் எயிட்ஸ் தொற்று: அதிகரிக்கும் எயிட்ஸ் அச்சுறுத்தல்

வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொடர்பில் விசாரணை
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 06:49.22 AM GMT ]
வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்தேவி ரயில் காங்கேசன்துறை வரைக்கும் பயணிக்க விடமாட்டேன் என அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்தேவி ரயில் காங்கேசன்துறை வரையில் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் காங்கேசன்துறை வரைக்கும் யாழ்தேவி ரயில் பயணிப்பதனை தடுக்கப் போவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை வரையில் யாழ்தேவி ரயில் பயணத்தை நீடிப்பதற்கான காரணம் படையினர் பயணிப்பதற்காகவே என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையில் தமிழ் மக்கள் பயணம் செய்ய மாட்டார்கள் என சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவாஜிலிங்கத்தின் இந்த எச்சரிக்கைக்கு அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKWexy.html

வெளிவிவகார அமைச்சின் பலவீனம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது: ஆளும் கட்சி எம்.பி
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 06:49.50 AM GMT ]
இலங்கை வெளிவிவகார அமைச்சில் காணப்படும் பலவீனம் மற்றும் குறைப்பாடுகள் காரணமாக இலங்கை சர்வதேசத்திற்கு மத்தியில் அபகீர்த்திக்கு உள்ளாகியிருப்பதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு வெளிவிவகார அமைச்சு உரிய முறையில் பதிலளிக்கவில்லை.
சர்வதேசம் இலங்கை மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் எந்த தேவையும் வெளிவிவகார அமைச்சுக்கு இல்லை.
சட்டத்திற்கு அமையவே அரசாங்கம் போரை முன்னெடுக்க முயற்சித்தது. எனினும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று சுட்டிக்காட்ட அரசாங்கம் தவறியுள்ளது.
ஐ.நா அதிகாரிகள் சாட்சியாளர்களாக இருந்தனர். அமைச்சர் விமல் வீரவன்ஸ, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது விமர்சனங்களை முன்வைத்தார்.
இதனால் பான் கீ மூன் கோபித்து கொண்டார். இலங்கையுடன் வேலை செய்த ஐ.நா அதிகாரிகளிடம் ஐ.நா செயலாளரின் தருஸ்மன் குழு விசாரணைகளை நடத்தவில்லை.
அதிகாரபூர்வமாக எழுதி பதில்களை வழங்கியிருந்தால், பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. ஏன் அரசாங்கம் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதில்லை?
அரசாங்கம் இது தொடர்பான பொறுப்பை எடுத்து கொள்வதில்லை. அரசாங்கம் சாட்சியங்களை முன்வைப்பதில்லை.
ஆனால், சிறு குழந்தைகளை போல், அரசாங்கம் வெறுமனே குற்றச்சாட்டுக்கள் தவறானவை, நாங்கள் பேச மாட்டோம் என்கிறது.
அதேவேளை இலங்கை வெளிவிவகார அமைச்சின் திறனை மேம்படுத்தும் தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை. வெளிவிவகார அமைச்சின் திறனானது வருடந்தோறும் குறைந்து வருகிறது.
இலங்கை முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.
இந்தியாவுடனான உறவுகளையும் சீர்குலைத்து கொண்டுள்ளனர் எனவும் ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKWexz.html
வானவில் கனவுகள் தரும் வரவு செலவுத்திட்டம் நாளை
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 06:59.57 AM GMT ]
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பொதுமக்களுக்கு பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொண்ட வரவு செலவுத் திட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்களின் கூடிய ஆதரவைப் பெறும் வகையில் இந்த வரவு-செலவுத்திட்டத்தில் கவர்ச்சிகரமான அபிவிருத்தி மற்றும் அறிவிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் அங்கவீனர்களின் வருமானத்தை அதிகரித்தல், கைக்குழந்தைகள், பாலர் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிப் பெண்களின் போசாக்கை உறுதிசெய்தல், நாடு தழுவிய பசுமை நகரங்கள், அனைவருக்கும் சொந்த வீடு, தொழில்வாய்ப்பு, வட்டி வீதம் குறைப்பு போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி சரிபார்ப்பு நடவடிக்கைகள் நேற்று மாலை தொடக்கம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருவதாகவும் அறியக் கிடைத்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARXKWex0.html
கர்ப்பிணிகளுக்கும் எயிட்ஸ் தொற்று: அதிகரிக்கும் எயிட்ஸ் அச்சுறுத்தல்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 07:07.19 AM GMT ]
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் எயிட்ஸ் அச்சுறுத்தலின் ஒரு கட்டமாக எயிட்ஸ் நோய் தொற்றிய ஐந்து கர்ப்பிணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான மருத்துவப் போராட்டங்களின் பயனாக இவர்களில் நால்வர் எயிட்ஸ் தொற்று இல்லாத ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். ஒருவருக்கு பிறந்த குழந்தைக்கு மட்டும் எயிட்ஸ் தொற்றியுள்ளது.
இதனையடுத்து தற்போது நாடு தழுவிய ரீதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பராமரிப்பின் ஒரு கட்டமாக எயிட்ஸ் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான குருதிப் பரிசோதனை மேற்கொள்வதற்கான சாதனங்கள் சுகாதார அமைச்சினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைப்பொறுத்தவரை ஏனைய நாடுகளைப்போன்று விலைமாதுகளின் மூலமாக எயிட்ஸ் நோய் பரவும் அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. அதற்குப் பதிலாக ஆண்களின் மூலமாகவே எயிட்ஸ் நோய் அதிகளவில் பரவிக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszARXKWex1.html

Geen opmerkingen:

Een reactie posten