[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 04:43.19 PM GMT ]
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.
சப்ரகமு பல்கலைக்கழகம் தற்போது மூடப்பட்டுள்ளது. எனினும் மாணவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கமோ எஸ்.பி. திஸாநாயக்கவோ தீர்வு வழங்க முன்வரவில்லை.
எஸ்.பி.திஸாநாயக்க நாட்டின் கல்வித்துறையை சீரழிக்கும் நோக்கிலேயே செயற்பட்டு வருகின்றார்.
மாணவர்களுக்கு எதிராக குரோத உணர்வுடன் செயற்பட்டு வருகின்றார். மாணவர்களை பழி வாங்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
“தேர்தல் என்பதால் பொறுத்துக் கொண்டோம், இல்லையென்றால் மாணவர்களை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பது எமக்குத் தெரியும்” என எஸ்.பி குறிப்பிட்டதன் ஊடாக மாணவர்களை அரசாங்கம் எவ்வாறு ஒடுக்கி அடக்குகின்றது என்பது புலனாகியுள்ளது.
அநேகமான பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் அரசியல் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் பல்கலைக்கழகங்களின் தரத்தை நிர்ணயிக்கும் முக்கிய பதவியில் எஸ்.பி தனது மகனை கடமையில் அமர்த்தியுள்ளார்.
அரசியல் நியாயங்களுக்கு அமைவாக இ;வ்வாறான நியமனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. நாட்டின் கல்வித்துறை குறித்து எஸ்.பி கரிசனை கொள்வதில்லை.
ஜனாதிபதியே எஸ்.பி. திஸநாயக்கவை கடமையில் அமர்த்தினார். எனவே பிரச்சினைகளுக்கான பொறுப்பினை ஜனாதிபதியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmp6.html
முஸ்லிம்களின் கரையோர மாவட்டக் கோரிக்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது: ஏ.எம்.ஜெமீல்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 04:59.57 PM GMT ]
அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கையை இழுத்தடிப்பு செய்து விட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தருவது என்பது அழுகின்ற பிள்ளைக்கு மிட்டாய் வழங்குவது போன்றதொரு ஏமாற்று வித்தையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நவம்பர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் பிரகடனத்திற்கு முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளிவந்துள்ள தகவல்கள் தொடர்பாக கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவற்றைக் குறிப்பிட்டார்.
இது குறித்து ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியானது உரிய காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட வேண்டியதொன்று என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அதற்கு முன்னதாக அம்பாறை கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
ஏனெனில் கடந்த 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்க கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைப்பதற்காக எமது முஸ்லிம் காங்கிரஸ்சின் ஆதரவு கோரப்பட்ட போது அந்த ஆதரவை வழங்குவதற்கு மு.கா. பல நிபந்தனைகளை முன்வைத்திருந்தது.
அவற்றை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு- எமது கட்சியுடன் எழுத்து மூல உடன்பாட்டைச் செய்து கொண்டதுடன் அவை அனைத்தையும் கூடிய விரைவில் நிறைவேற்றித் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தது.
அவற்றுள் முதன்மையானது அம்பாறை கரையோர மாவட்டமேயாகும். அதற்கு மேலதிகமாகவே இரண்டரை வருடங்களின் பின்னர் கிழக்கு முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவது உள்ளிட்ட மற்றும் சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
எனினும் இப்போது ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை மு.கா.வுக்கு தந்து விட்டு எமது கட்சியை வளைத்துப் போடலாம் என்று அரசாங்கம் தப்புக் கணக்குப் போடுவதாகவே நாம் உணர்கின்றோம். இதற்கு முஸ்லிம் காங்கிரசோ முஸ்லிம் சமூகமோ ஒருபோதும் ஏமாறப் போவதில்லை.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிதான் எமது இலக்கு என்றால் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை நிறுவுவதன் ஊடாக மிக இலகுவாகப் பெற்றிருக்க முடியும். அதுவும் இரண்டரை வருடங்களுக்கு அல்ல முழு ஆட்சிக் காலத்திற்கும் அப்பதவியை தமதாக்கிக் கொண்டிருக்கலாம்.
அத்தருணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சாதிக்க நினைத்தது கரையோர மாவட்டம் உள்ளிட்ட சமூக நலன் சார்ந்த விடயங்களையே. அத்தகைய ஒரு இலக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவதன் மூலம் அடைந்து கொள்ள முடியாது என்கின்ற யதார்த்தமே அவ்விணைவுக்கு தடங்கலாகவும் அரசாங்கத்துடன் ஒன்றிணைவதற்கு சாதகமாகவும் இருந்த ஒரே காரணி என்பதை இங்கு அழுத்தம் திருத்தமாக கூறிக் கொள்கின்றேன். கட்சியின் இந்த நியாயத்தை எவராவது மறுதலிக்க முடியுமா?
இப்போது அரசினால் எமக்கு தட்டில் வைத்துத் தரப்படவுள்ள இரண்டரை வருட கிழக்கின் ஆட்சியானது ஒரு தற்காலிக அதிகாரமேயாகும். அது கூட சிலவேளை வடக்கில் சி.வி.விக்னேஸ்வரனின் ஆட்சியை ஒத்த- அதிகாரங்கள் பிடுங்கப்பட்ட ஒரு வெற்றுக் கிரீடமாகவும் இருக்கலாம்.
இதற்காக முஸ்லிம் சமூகத்தின் நீண்ட கால அபிலாஷையான கரையோர மாவட்டக் கோரிக்கையை குழிதோண்டிப் புதைப்பதற்கு இடமளிக்க முடியுமா?
கடந்த காலங்களில் கட்சிக்கு சில பதவிகளைத் தந்து விட்டு சமூக நலன் சார்ந்த விடயங்களில் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்ட வரலாறுகள் நிறைய இருக்கின்றன.
அவ்வாறான ஒரு தவறைச் செய்வதற்கு எமது கட்சி இனியும் தயாரில்லை என்பதில் தலைமைத்துவமும் கட்சியின் அதியுயர் பீடமும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் மிகத் திடமான உறுதியுடன் இருக்கின்றனர் என்பதை இச்சந்தர்ப்பத்தில் சொல்லி வைக்கின்றேன்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரகடனத்திற்கு முன்னதாக அம்பாறை கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை.
கரையோர மாவட்டம் இல்லாத நிலையில் கிழக்கின் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று நான் உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன்.
இது விடயத்தில் கட்சிக்குள் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. கட்சியின் அடிமட்டப் போராளிகள் இதற்கான அழுத்தங்களை பலமாகக் கொடுத்து வருகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் இழந்து போன பேரம் பேசும் சக்தி மீண்டு வரும் தருணத்தில் சில அரசியல் பதவிகளுக்காக சோரம் போய் இன்னொரு வரலாற்றுத் தவறை இழைப்பதற்கு நாம் தயாரில்லை.
இது விடயத்தில் கட்சிப் போராளிகளும் உயர் பீடத்தினரும் மிகத் தெளிவாகவும் திடமாகவும் நம்பிக்கையுடனும் இருந்து வருகின்றனர்.
இந்த கொள்கை கோட்பாடு ஒருபோதும் வீணடிக்கப்பட மாட்டாது என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmp7.html
Geen opmerkingen:
Een reactie posten