[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 04:03.26 PM GMT ]
இலங்கை வங்கியில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடம் இருந்து 190,000 ரூபாவை பெற்றமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், மாத்தறை தெனியாய பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmp2.html
சீனன்குடாவில் அஸ்ரப்பின் பெயர் மாற்றம்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 04:13.51 PM GMT ]
இனந்தெரியாதவர்களால் இந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை முதல் இந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இறங்குத்துறை மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmp3.html
இந்த ஆட்சியின் கீழ் மக்கள் அடிவாங்க நேரிட்டுள்ளது: கரு ஜயசூரிய
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 04:14.35 PM GMT ]
ஊடக அறிக்கையொன்றின் மூலம் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இராஜதந்திரி ஒருவரை தாக்கியமை இதுவே முதல் தடவையாகும்.
நாட்டின் வெளிவிவகார மற்றும் இராஜதந்திர சேவையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
49 ராஜதந்திரிகளில் 35 அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள். கிறிஸ் நோனிஸ் தொடர்பில் சில விமர்சனங்கள் இருந்தாலும், நாட்டுக்காக சேவையாற்ற முயற்சித்தவர்.
நோனிஸ் மீதான தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணைகள் நடைபெறும் என நம்ப முடியாது.
தற்போது தூதுவர், இராஜதந்திர உயர்ஸதானிகர் போன்ற பதவிகளை வகிக்க எந்தவொரு கல்வித் தகைமையோ வேறும் தகைமைகள் கிடையாது தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmp4.html
தமிழர்களது வயற்காணிகளை திட்டமிட்டு அபகரிக்கும் பௌத்த பிக்குகள்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 04:29.09 PM GMT ]
இது தொடர்பாக தெரியவருவதாவது.
துறைநீலாவணை ஏழாம் வட்டடாரத்தில் இருக்கும் நாகமுத்து லக்சுமணன், நாகமுத்து கமலலக்சுமி, காத்தமுத்து ராஜலக்சுமி, காத்தமுத்து ராசமணி ஆகியோருக்கு சொந்தமான 4 ஏக்கர் வயல் காணியினை நன்கு திட்டமிட்ட முயைறில் அபகரித்து சிங்கள மக்களுக்கு வயல் செய்வதற்காக கையளித்திருக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக வெல்லாவெளி பிரதேச செயலாளரிடம் தாங்கள் முறையிட்டதாகவும் அங்கு திட்டமிட்டடு அபகரிக்கப்பட்ட காணியானது உங்களுக்கு சொந்தமானது எனவும் அவர் கூறியதாகவும் பின்னர் வெல்லாவெளி பொலிசாரிடம் சென்று முறையிட்ட போது அவர்கள் பௌத்த துறவிகள் சொன்ன சொல்லை மீறி தாங்கள் எதுவும் செய்யமுடியாது அதனை மீட்டுத்தருவதற்கான எந்த நடவடிக்கையினையும் எடுக்க மாட்டோம் எனவும் கூறியிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கருத்துரைக்கையில்,
காலாகாலமாக தமிழர்களே இங்கு வயல் செய்து வந்ததாகவும் அந்த இடத்தினை அபகரிக்கும் நோக்குடன் இவ்வாறான பௌத்த பிக்குகள் சட்டத்தினை மீறி செயற்படுவதானது மிகவும் கீழ்த்தரமான விடயமாகும், மட்டக்களப்பில் இருக்கும் பௌத்த துறவிக்கு தமிழர்களது பூர்வீக காணிகளை அபகரிப்பதுதான் அவரது முழு பணியாகவும் இருந்து வருகின்றது.
கெவுளியாமடுவிலே காணியபகரிப்பில் ஈடுபட்ட இவர் சின்னவத்தையில் இருக்கு இன்னுமொரு பௌத்த துறவியுடன் சேர்ந்து எல்லை புரங்களில் உள்ள தமிழர்களது காணிகளை திட்டமிட்டமுறையில் அபகரித்து தனது இனத்திற்கு கையளிப்பதனையே குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றார்கள்.
நாட்டிலே சிவில் நிருவாகம் சிறந்த முறையில் நடைபெறுகின்றது என்று அரசாங்கம் வாயளவில் கூறினாலும் அது செயல்வடிவில் இல்லை என்பதற்கு பொலிசார் இந்த காணி விடயத்தில் எடுத்த தீர்மானம் சான்றாக அமையும்.
தமிழர்களது பூர்வீக நிலங்கள் நாளுக்கு இவ்வாறு தவறான முறையில் வேற்று இனத்தவர்களினால் சூறையாடிக்கொண்டு போவதனை தமிழர்களாகிய நாம் வெறுமனே பார்த்துக்கொண்டு வாய் மூடி கைகட்டி நிற்போமானால் இருக்கின்ற எமது நிலங்கள் எம்மைவிட்டு பறிபோய்விடும் என்பதனை ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்,
மற்றும் அரசாங்கத்தேடு சேர்ந்து தமது ஆசனங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்மக்களுக்கான அபிவிருத்தி அபிவிருத்தி என்று மக்களை ஏமாற்றி இருக்கின்ற தாயக பூமியினை இழக்கச்செய்து அரசியல் இலாபம் தேடாமல் தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் அக்கறை காட்டுவார்களேயானால் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் தங்களது சொந்த இடங்களில் வாழ்வதற்கு வழியேற்படும் எனவும் கூறினார்
http://www.tamilwin.com/show-RUmszATaKWmp5.html
Geen opmerkingen:
Een reactie posten