சிலவேளைகளில் தமிழர் தான் தமிழர்களுக்கு எதிரியாக உள்ளார்கள் என்று கூறுவது சரியா என்று நினைக்கத்தோன்றும் அளவு பல சம்பவங்ள் ஐரோப்பாவில் இடம்பெற்று வருகிறது. லண்டன் , ஜேர்மனி , பிரான்ஸ் , நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளில் பல தமிழர்கள் வியாபார நிலையங்களை வைத்திருக்கிறார்கள். பலர் தம்மிடம் வேலைபார்கும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளத்தை கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதில் சிலர், தமிழர்களையும் வேற்று நாட்டவர்களையும் வேலைக்கு அமர்த்தி அவர்களின் வியர்வையையும் ரத்தத்தையும், உரிஞ்சி வருவதைகண்கூடாக காணக்கூடிய ஒரு விடையமாக உள்ளது.
இந்த வகையில் நோர்வே “பேர்கன்” நகரைச் சேர்ந்த ஈழத் தமிழர் ஒருவரும், இதுபோல குறைந்த சம்பளத்தில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பிழிந்து எடுத்து வந்துள்ளார். ஆனால் இவ்விடையம் பொலிசாருக்கு தெரிந்ததால் அவர்கள் உடனே அன் நபரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
லண்டனில் சராசரியாக ஒருவர் மணித்தியாலத்திற்கு வேலைசெய்ய சுமார் £5.50 பவுன்டுக்கு மேல்கொடுக்கவேண்டும் என்ற சட்டம் உள்ளது.
ஆனால் லண்டனில் உள்ள சில கடைகளில், ஒரு மணித்தியாலத்திற்கு 3.00 பவுன்களையே தமிழ் முதலாளிகள் தமது ஊழியர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். இது சட்டப்படி குற்றம் ஆகும். இதேவேளை அதிக லாபம் சம்பாதிக்கவே இவர்கள் போன்ற முதலாளிகள் முனைப்பு காட்டி வருவதும், நல்லதொரு உதாரணமாகவும் அமைந்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/85107.html
Geen opmerkingen:
Een reactie posten