அவுஸ்திரேலியா அரசாங்கம் கடைப்பிடிக்கும் கடும்போக்கு கொள்கை காரணமாக மிகவும் பாரிய மன அழுத்தத்துக்கு பலர் தள்ளப்பட்டுள்ள நிலையிலுள்ளனர்.
பாகம்-1 இன் தொடர்ச்சி...
அதை நம்பி நாமும் சில நாட்கள் மறைந்து வாழ்ந்தோம். அடகு வைத்த நகைக்கு வட்டி வீட்டில் பணம் இல்லை. எமது நிலை பாரிய கேள்விக் குறியாக மாறியது.
ஒரு தரகரை நம்பி பலன் இல்லை என்று தோன்றியது. எமக்கு மிகவும் அழுத்தமும் உருவாகத் தொடங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினோம்.
திடீர் என்று ஒரு தகவல் வந்தது தரகர் கைது செய்யப்பட்டுள்ளதாக. சரி போனது 3 லட்சம் எமது வாழ்க்கை சிறை வாசம் அனுபவிப்பது உறுதி என்று நினைத்து விட்டு தனது மற்றைய நண்பருடன் உரையாடலாம் என நினைத்தேன்.
நண்பனை பார்ப்போம் என்று போனால் நண்பர் தனது குடும்ப பிரச்சினை காரணமாக இரவோடு இரவாக ஒரு படகில் ஏறி அந்த படகு பிடிபட்டு சிறையில் அடைக்கப் பட்டார் என்று தகவல் கிடைத்தது.
சரி என்ன செய்யலாம் என்று புரியவில்லை. நாம் சென்று பார்த்திருந்தோம் நல்ல பாதுகாப்பான இடம், பாதுகாப்பு என மிகவும் திறமையாக செய்யப்பட்டு இருந்த போதிலும் ஏன் தரகர் கைது செய்யப்பட்டார் என்ற பாரிய கேள்வி எனக்கு தோன்றியது.
அப்போதுதான் சிறிய கதை வந்து சேர்ந்தது. தரகர்கள் அதிகரித்து அவர்களுக்குள் ஏற்பட்ட குரோதம் காரணமாக காட்டிக்கொடுப்பு ஒன்று இடம் பெற்றதாக அறிந்தோம்.
3 லட்சம் இல்லை வீதிக்கும் போக முடியாது என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினோம். மேலும் ஒரு அழைப்பு வந்தது. தம்பி எல்லாம் சரி உங்களை இன்னும் 3 நாட்களில் அனுப்ப போறன் நீங்கள் இன்னும் 2 லட்சம் பணம் தர வேண்டும் என்றார்.
அப்போது இவர் அவரிடம் கேட்டார் நீங்கள் கூறியது போல் நடக்க வில்லை அதனால் உங்களுக்கு பணம் தர முடியாது என்றார்.
சரி தம்பி நீ செய்றத செய் உன்னை அனுப்ப மாட்டேன் இனி உனக்கு வரும் விளைவுகளை இருந்து பார் என்றார்.
என்ன இப்படி இவன் சொல்லுறான் என்று யோசனையும் கவலையுடன் இருந்தபோது ஒரு அழைப்பு வந்தது இன்று இரவு ஒரு விடுதிக்கு வந்து பாருங்கள். அப்போது புரியும் உங்களுக்கு என்று கூரினார்.
சரி என்னடா இவர் இப்படி கூறுகின்றார் என்று வெளியில் போகவும் பயம் சரி போய். பார்ப்போம் என்று போனால், சார்க் மாநாடு போன்று கூட்டம் நடக்கின்றது. நாம் தப்பான இடத்துக்கு வந்திட்டம் போல் இருக்கு போவம் என்று வெளிக்கிட தரகர் பலத்த பாதுகாப்புடன் வந்தார் தம்பி வாங்க என்றார்.
என்ன இங்க நடக்கின்றது என்று கேட்டோம்.
தம்பி உங்களிடம் பணம் கேட்டது இதுக்குத்தான். உங்களிடம் வாங்கும் பணம் எனக்கு மட்டும் இல்லை. எனக்கு மேல் பத்துப் பேர் இருக்கின்றார்கள் அதுதான் உங்களை அழைத்தேன் என்றார். அவருக்கு மேல் உள்ள 10 பேர் யார் என்று கூற முடியாது கரணம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன்.
அப்போது அவர் சொன்னார் இவர்கள் இப்போ தான் ஒரு படகு அனுப்பி விட்டு தங்களது சொந்த இடத்துக்கு போக போகின்றார்கள். அதுதான் அவர்களை அழைத்து சிறிய உபசாரம் செய்கின்றோம். இதன் மூலமாக தரகர்கள் போட்டி, பொறாமை பிரச்சினை இருக்கின்றது இனி அது வராது என்றார்.
எல்லாம் நம்பி வீட்டுக்கு வந்து அவன் கேட்ட 2 லட்சமும் கொடுப்பதற்கு ஆயத்தம் மேலும் ஒரு அழைப்பு. உபசாரம் செய்தவர்கள் தரகரை கைது செய்து விட்டதாக.
என்ன வாழ்க்கையடா என்று தலையில் அடித்துவிட்டு சரி பார்ப்போம் என்று. அவன் வருவான் நம்மள ஏமாத்த நினைக்கின்றான் என்று நினைத்து விட்டு அந்த பணம்
காப்பாத்த பட்டு விட்டது என்று ஒரு பெரு முச்சுடன் இருந்தார்கள்.
காப்பாத்த பட்டு விட்டது என்று ஒரு பெரு முச்சுடன் இருந்தார்கள்.
கூறியபடி கைது செய்து 20 நிமிடங்களில் விடுதலை செய்யப்பட்டான். செத்தாலும் பரவா இல்லை. இனி போறது இல்லை என்ற முடிவு எடுக்கும் நிலைக்கு மனம் மாறியது. ஒவ்வொரு நாளும் செய்தி கேட்டால் 3 படகு சென்றடைந்தது, 4 படகு சென்றடைந்தது. நாம் கொடுத்த 3 லட்சமும் இல்லை என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினோம்.
குறைந்தது 6 மாத தாமதம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தார்கள். அவற்றை பாதுகாப்பு கரணம் கருதி இதில் பதிவு செய்ய வில்லை.
6 மாதங்கள் கடந்து ஒரு அழைப்பு தம்பி எல்லாம் சரி இன்று இரவு செல்ல வேண்டும் உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்றார்.
அடுத்து பயணம் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை எதிர்பாருங்கள்
தொடரும்..!
எஸ் .கே
எஸ் .கே
Geen opmerkingen:
Een reactie posten