தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

இலங்கை பாராளுமன்றில் நரேந்திர மோடி உரையாற்றுவார்: அரசியல் ஜோக்கர் சுவாமி!

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதிப்பு!- வாசுதேவ
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 11:53.54 PM GMT ]
அடுத்த ஆண்டு அரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படும் என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சரினால் வெளியிடப்டப்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நட்ததப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு தேர்தல்களை முன்கூட்டியே நடாத்த வேண்டிய நியாயமான அவசியம் கிடையாது.
தேர்தல் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை பற்றி தெரியாது.
2005ம் ஆண்டு மற்றும் 2010ம் ஆண்டு மஹிந்த சிந்தனை கொள்கைப் பிரகடனங்களில் கூறப்பட்ட பல விடயங்கள் இன்னமும் பூர்த்தியாகவில்லை.
கூட்டமைப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இது பற்றி தீர்மானம் எடுக்க வேண்டும்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் அல்லது வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறான ஓர் நிலைமையில் தொடர்ந்தும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அமுல்படுத்துவதாக தர்க்கம் செய்வதில் பயனில்லை.
கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலில் களமிறங்காவிட்டால் அதனை ஓர் பின்னடைவாகவே கருத வேண்டும்.
எதிர்;த்தரப்பினரின் திட்டங்களை முறியடிக்கக் கூடிய வகையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டுமென வாசுதேவ நாணயக்கார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnu4.html
ஜனாதிபதியின் பயணத்துக்காக அதிநவீன ஆசனங்களுடன் புதிய விமானம் கொள்வனவு!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 11:47.15 PM GMT ]
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய விமானம் ஒன்றில் ஜனாதிபதிக்கான அதிநவீன ஆசன இருக்கை பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலமே ஜனாதிபதியின் குழாம் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளவுள்ளது.
இந்த ஆசனப் பகுதியை எயார்பஸ் கோப்பரேட் ஜெட் சென்டர் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
விமானத்துறை தகவல்களின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்களுக்காகவே இந்த புதிய விமானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் இரண்டு  டபிள் முக்கியஸ்தர்களின் இருக்கைகள் மற்றும் இரண்டு கிளப்-நான்கு முக்கியஸ்தர்களின் இருக்கைகள் மற்றும் ஹைலோ டேபிள்ஸ் என்பன அமைக்கப்பட்டுள்ளன.
விசேட வேண்டுகோளுக்கு அமைய இந்த இருக்கைப்பகுதி சுமார் 8 மணித்தியாலங்களுக்குள் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் 10 புதிய எயார்பஸ் விமானங்களை தருவிக்கவிருந்தது.
அதில், ஆறு ஏ330-300 மற்றும் 4 ஏ 350-900 எஸ் ரக விமானங்கள் அடங்கியுள்ளன.
இதில் ஒன்று ஏற்கனவே இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலேயே ஜனாதிபதிக்கான விசேட இருக்கை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnu3.html
இலங்கை பாராளுமன்றில் நரேந்திர மோடி உரையாற்றுவார்: அரசியல் ஜோக்கர் சுவாமி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 11:37.03 PM GMT ]
இலங்கை நாடாளுமன்றத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நான் சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்றும் அவர் தனது டுவிட்டர் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnu2.html

Geen opmerkingen:

Een reactie posten