தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 oktober 2014

வெளிநாடு பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பு

ஓமந்தையை தாண்டி வடக்கிற்கு செல்லவிரும்பும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியை பெற வேண்டும் என்ற பயணக் கட்டுப்பாடுகளை அடுத்து அநேகமான மேற்குலக நாடுகள் தமது பிரஜைகளை குறித்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் இதில் அடங்குகின்றன.
சர்ச்சைக்குறியதாக மாறியுள்ள வட பகுதிக்கான அத்தியவசியமற்ற பயணங்களை முழுமையாக தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளிடம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
ஒக்டோபர் 15 ஆம் திகயே வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியை பெற வேண்டும் என்ற உத்தரவு அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவு வெளியாகியதை அடுத்து உடனடியாக பிரித்தானிய அரசு, தமது பிரஜைகளை இலங்கையின் வட பகுதிக்கு செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து அமெரிக்கத் தூதரகம் கடந்த 21 ஆம் திகதி தனது இணையத்தளம் ஊடாக தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்தது. இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்கர்கள் இந்த இணையத்தளத்தில் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை முழுமையாக கடைபிடிப்பர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை கனடாவும், வடக்கு மாத்திரமன்றி கிழக்கிற்கும் தமது பிரஜைகள் செல்வது ஆபத்தானது என அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் அரசோ, இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருபவர்களின் பட்டியலொன்றை தயாரித்துள்ளதாகவும், அதில்16 வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புக்களினதும், 424 தனி நபர்களினதும் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் இலங்கையில் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என்றாலும், மீண்டும் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் அச்சத்தை முழுமையாக நிராகரிக்க முடியாது என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இன மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் இலங்கை முழுவதிலும் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பிரான்ஸ் அரசு, இந்த நிலையிலேயே மீண்டும் இலங்கைக்குள் பயங்கரவாதம் தலைதூக்கலாம் என்ற இலங்கை அரசு அச்சம் வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/84995.html

Geen opmerkingen:

Een reactie posten