[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 12:27.44 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை அவசரமாக சந்தித்திருந்தனர்.
தேர்தல் அறிவிக்கப்படும் நாள் முதலே சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த கால தேர்தல்களின் போது அரசாங்கம் மோசமான முறையில் தேர்தல் விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளது.
அரச சொத்து பயன்பாடு, சட்டவிரோத பிரச்சாரம், அடக்குமுறைகள் என பல்வேறு வழிகளில் அரசாங்கம் விதி மீறல்களில் ஈடுபட்டது.
ஜனாதிபதி தேர்தலிலும் இ;வ்வாறான விதி மீறல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே, தேர்தல் தினத்தில் மட்டுமன்றி தேர்தல் அறிவிக்கப்படும் நாள் முதல் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfs4.html
ஜெயலலிதாவை போன்று ஜெயலலித்தும் தண்டிக்கப்பட வேண்டும்: ரஞ்சன் ராமநாயக்க
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 12:46.16 AM GMT ]
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஊழல் தொடர்பில் ஜெயலலிதா இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் இலங்கையில் உள்ள ஜெயலலித் சுதந்திரமாக திரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது குற்றவாளிகள் குழு ஆட்சி நடத்தி வருகிறது என்று நேற்று தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சில அரசியல்வாதிகள் ஒரு லட்சம் பெறுமதியான சப்பாத்துக்களை அணிகின்றனர். சிலர் முதலை தோல்களால் செய்யப்பட்ட சப்பாத்துக்களை அணிகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfs5.html
ஆணைக்குழு விசாரணைகளில் பங்கேற்கவில்லை!- நிபுணர் குழு குறித்து சந்தேகம்
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 12:48.04 AM GMT ]
நிபுணர்கள் மூவரைக் கொண்ட குழு, கடந்த செப்டெம்பர் மாதம் 27, 28, 29, 30ஆம் திகதிகளில், கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமற் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணையின் பங்குபற்ற மீண்டும் தவறியுள்ளனர்.
இந்த மூன்று வெளிநாட்டு அவதானிகளும் மன்னாரில் நடந்த ஆணைக்குழுவின் அமர்விலும் கலந்துக்கொள்ளவில்லை. இதனால், அவர்களது ஒத்துழைப்பு தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமற் போனோரின் குடும்ப அங்கத்தவர்களிடமிருந்து ஜனாதிபதி ஆணைக்குழு 19,284 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. ஆயுதப் படையினரின் குடும்பங்களிலிருந்து பெற்ற 5,600 முறைப்பாடுகளும் இவற்றுள் அடங்குகின்றன.
இந்த ஆணைக்குழு இதுவரை அண்ணளவாக 1,000 முறைப்பாடுகளை ஆராய்ந்துள்ளது. சகல முறைப்பாடுகளையும் கேட்பதற்கு பல வருடங்கள் எடுக்கும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பரணகம ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfs6.html
Geen opmerkingen:
Een reactie posten