[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 10:01.21 AM GMT ]
தங்கம் வைத்து தைக்கப்பட்ட காற்சட்டையை அணிந்து சென்ற இலங்கையரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவை நோக்கி பயணிக்கவிருந்த கொழும்பு, குணசிங்கபுரத்தை சேர்ந்த 34 வயதான புடவைக்கடை வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
குறித்த நபர் மேலும் சில தங்கத்துண்டுகளை மலவாயில் மறைத்து வைத்துக் கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.
குறித்த நபரிடமிருந்த தங்கத் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் நிறை 289கிராம் என்றும் அதன் பெறுமதி 14 இலட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாய் என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்173 என்ற விமானத்திலேயே பெங்களூரை நோக்கி செல்லவிருந்ததாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmu4.html
விடுதலைப் புலிகளின் மீள்எழுச்சி நிச்சயம், அரசும் கவிழும்: சோதிடர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 10:09.17 AM GMT ]
மவ்பிம (ஞாயிறு ) சிங்களப் பத்திரிகையில் வெளியாகியுள்ள சோதிடர்களின் கருத்துக்களில் இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியை மையமாகக் கொண்டு இவர்களது கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இதன்போது பிரபல சோதிடர்களான சுமணசிறி பண்டார, எஸ்.ஜே. சமரக்கோன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி நிச்சயம் என்று அடித்துச்சொல்லியுள்ளனர்.
அதே நேரம் சர்வதேச மற்றும் உள்நாட்டு நெருக்கடிகள் காரணமாக அரசாங்கம் கவிழும் நிலைமை இருப்பதாகவும் அவர்கள் சூசகமான முறையில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
1976ம் ஆண்டு, 2001ம் ஆண்டுகளிலும் இவ்வாறான சனிப்பெயர்ச்சியின்போது சுதந்திரக் கட்சிக்கு நெருக்கடிகள் ஏற்பட்டதை சுமணசிறி பண்டார சுட்டிக்காட்டுகின்றார்.
இம்முறையும் அதேபோன்ற நெருக்கடிகள் மற்றும் ஆட்சியிழப்பு ஏற்படலாம் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.
எனினும் அரசாங்கத்துக்கு நெருக்கடி இருப்பதை ஏற்றுக் கொண்டுள்ள சோதிடர் போத்தலகே, விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி இனி ஒருபோதும் சாத்தியமில்லை என்றும், அதற்குப்பதிலாக சர்வதேச நெருக்கடி சாத்தியம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சோதிடர் எஸ்.ஜே. சமரக்கோன் அரசாங்கம் பதவியிழப்புக்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் நெருக்கடியான நீதித்துறை தீர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதாகவும் எச்சரித்துள்ளார்.
2005ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த வெற்றிபெற மாட்டார் என்று 50 சோதிடர்கள் தெரிவித்திருந்தனர். மஹிந்தவுக்கு ஆதரவாக எட்டுப்பேர் மட்டுமே கருத்து வெளியிட்டிருந்தனர்.
அவர்களில் எஸ்.ஜே. சமரக்கோன் முக்கியமானவர்.2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவே ஜனாதிபதியாவார் என்றும், இரண்டு தடவைகள் பதவி வகிப்பதுடன், விடுதலைப் புலிகளின் முடிவு குறித்தும் எஸ்.ஜே. சமரக்கோன் தெளிவான எதிர்வு கூறலை வெளியிட்டிருந்தார்.
அது மட்டுமன்றி அவரது எதிர்வு கூறலுக்கேற்ப சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல், மங்கள-ஸ்ரீபதி அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட சம்பவம் போன்ற நிகழ்வுகளும் அச்சொட்டாக நடந்து முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmu5.html
பட்ஜெட்டில் துண்டுவிழும் தொகை அதிகரிப்பு! முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 10:34.32 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ. ஹசன் அலி கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் கவர்ச்சிகரமாக இருந்த போதும் வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் துண்டு விழும் தொகை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துக் காணப்படுகிறது.
இதனால் மக்கள் பாரிய பொருளாதார அழுத்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmu7.html
Geen opmerkingen:
Een reactie posten