ஜேர்மனியில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்குவதாக உளவு அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜேர்மனியின் உள்நாட்டு உளவுத் துறை அமைப்பின் தலைவரான ஹான்ஸ் ஜோர்ஜ் மாஸன் பெர்லினில் வானொலிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், ஜேர்மனியில் இப்போது "ஸலாஃபி' என்ற அடிப்படைவாத இயக்கமொன்று செயல்பட்டு வருகிறது.
சுமார் 6,300 பேர் உள்ள இந்த இயக்கத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் எண்ணிக்கை 7,000ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பல்வேறு மன அழுத்தங்கள் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களை கவர்ந்து வரும் இந்த இயக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் 3,800 பேர்தான் உறுப்பினர்களாக இருந்தனர்.
மேலும், ஜேர்மனியில் இஸ்லாமிய அடிப்படைவாதமும் தீவிரவாதமும் தலைதூக்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
http://world.lankasri.com/view.php?22cMM403JOyce25nBdb220Mbd2o8Eec2PBV042AlJ2236A43
|
Geen opmerkingen:
Een reactie posten