தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

உள்நாட்டில் வளர்ந்த பயங்கரவாதிகளால் தாக்குதலிற்குள்ளான கனடா!.

கனடிய பாராளுமன்றதிற்குள் துப்பாக்கி சமர். ஒட்டாவா முற்றுகை. சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலதிக சந்தேக நபர்களை தேடும் முயற்சியில் பொலிசார்.

0

ஒட்டாவா நகர டவுன்ரவுன் பிரதேசம் பூராகவும் பாதுகாப்பு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் பொலிசார் வெள்ளம் போல் நிரம்பியுள்ளனர்.
இச்சம்பவத்தில் எத்தனை சந்தேக நபர்கள் அடங்கியுள்ளனரென தெரியவரவில்லை என அறியப்படுகின்றது. இதே சமயம் குறைந்தது மேலும் இரண்டு துப்பாக்கிதார சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் துப்பாக்கி பிரயோகம் Parliament Hill மாவட்டத்தின் 3-இடங்களில் பரவியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அப்பகுதியில் உள்ள  Rideau Centre என்ற சொப்பிங் சென்டருக்கு அண்மையிலும் துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிகளை சுற்றிவளைத்து பொலிசார் சந்தேக நபர்களை தேடிவருகின்றனர்.
கனடிய பிரதம மந்திரி Stephen Harper பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவர் பங்கு கொள்ள இருந்த நிகழ்வுகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.Canada-pm-01Canada-pm-02Canada-pm-03Canada-pm-04Canada-pm-05Canada-pm-06Canada-pm-07Canada-pm-08Canada-pm-09Canada-pm-10
hill5hillhill1hill2hill3hill4
 - See more at: http://www.canadamirror.com/canada/32903.html#sthash.OsVUDIc6.dpuf

உள்நாட்டில் வளர்ந்த பயங்கரவாதிகளால் தாக்குதலிற்குள்ளான கனடா!.

0
24-வயதுடைய ஹமில்டன் உதவி படைவீரரான Cpl Nathan Cirillo தேசிய போர் நினைவுசின்னத்தின் முன் கடமையில் நின்றபோது முகமூடி அணிந்த ஒரு நபரால் சுட்டு கொல்லப்பட்டார். சந்தேக நபர் நீண்ட கறுப்பு நிற தலைமுடியுடன் கறுப்பு மற்றும் வெள்ளை பலஸ்தீனிய வகை தலை அங்கியால் முகத்தை மூடிய படி  இரண்டு தடவைகள் சுட்டதாக சம்பவத்தை பார்த்த சாட்சி ஒருவர் கூறியுள்ளார்.
துப்பாக்கிதாரி கனடாவில் பிறந்த 32-வயதுடைய Michael Zehaf-Bibeau என ஒரு யுஎஸ் அதிகாரி CBS News ற்கு அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்த நபர் பாராளுமன்றத்திற்குள் புகுந்த சமயம் அங்கு கன்சவேட்டிவ் மற்றும் என்டிபி MP க்கள் அவரவர் வாராந்தர கட்சி கூட்டங்களை ஆரம்பித்த சமயம் என கூறப்பட்டுள்ளது. பிரதம மந்திரி Stephen Harper-ம் அங்குதான் இருந்துள்ளார்.
நாட்டின் 147 வருட வரலாற்றில் இத்தகைய ஒரு காட்சி இடம்பெறவில்லை எனவும் ஒரு காட்டுத்தனமான தாக்குதல் கனடாவின் அரசாங்க தொகுதியில் வெடித்துள்ளதெனவும் பேசப்படுகின்றது.
தோட்டாக்களின் ஆலங்கட்டி சென்டர் புளொக்கின் மாபிள் கூடத்தினூடாக எதிரொலித்ததெனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒலி எப்போதும் ஒலிக்கும். பாராளுமன்றம் இருந்தது போல் இனி இருக்கமாட்டாதென என்டிபி எம்பி Ryan Cleary கூறினார்.
கட்சிகளின் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயம் 30-சூடுகள் வரை சுடப்பட்டுள்ளது.துப்பாக்கி சமரின் போது பாராளுமன்ற காவலர் ஒருவருக்கு காலில் சுடப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பாதுகாப்பு உத்தியோகத்தரான கெவின் விக்கெர்ஸ் என்பவர் துப்பாக்கிதாரி எம்பிக்களை அணுக முன்னர் சாமர்த்தியமாக அவரை தடுத்து கொன்றுள்ளார்.
பிரதம மந்திரி உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து விட்டார்.
கட்டிடத்திற்குள் இருந்த அனைவரையும் அவரவர் காரியாலத்தில் இருக்கும் படியும் தங்கள் தங்கள் மேசைகளிற்கு அடியில் பதுங்கி இருக்குமாறும் செய்தி அனுப்பியுள்ளார்.
மாலை வரையும் வேறு எந்த சந்தேக நபர்களும் அடையாளம் காணப்படவில்லை.
பாதுகாப்பு கருதி வாசிங்டனில் உள்ள கனடிய தூதுவராலயம் மூடப்பட்டது.
இரண்டு நாட்களிற்குள் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும். திங்கள் கிழமை தீவிரவாதி Martin Rouleau ஒரு படை வீரரை கொன்றதுடன் இன்னொருவரை காயப்படுத்தினார். பின்னர் இவர் அதிகாரிகளால் சுடப்பட்டார்.
இந்த தீவிர போக்குடைய இஸ்லாமியர் ஏற்கனவே ஆர்சிஎம்பியினரின் கண்காணிப்பில் இருந்ததோடு கடந்த கோடைகாலத்தில் துருக்கி செல்ல முயன்றபோது இவரது கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் கனடிய ISIS அங்கத்தவர் ஒருவர் யுரியுப் மூலம் “கனடாவிற்கு ஒரு செய்தி. நாங்கள் வருகின்றோம் நாங்கள் உங்களை அழிப்போம்.” என்ற எச்சரிக்கை விடப்பட்டது.
இது அவர்களின் ஆரம்ப நடவடிக்கையா என கனடிய மக்களை யோசிக்க வைத்துள்ளது.
சுட்டு கொல்லப்பட்ட படை வீரர் Cirillo–விற்கு மக்கள் மலர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
gun9gungun1gun2gun3gun4gun5gun6gun7gun8
 - See more at: http://www.canadamirror.com/canada/32933.html#sthash.otarPZiK.dpuf

Geen opmerkingen:

Een reactie posten