தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

எதிர்காலமற்ற சூனியவெளி அந்தரத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்கள்: அருண் தம்பிமுத்து

பெருந்தொகை வெளிநாட்டுப் பணத்தை மறைத்து எடுத்துச் சென்றவர் கைது
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 03:30.40 PM GMT ]
சுமார் 60 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தை திருட்டுத்தனமாக எடுத்து்ச் செல்ல முயன்ற நபரொருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றதாக சிங்கள ஊடகங்களுக்கு சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா டொலர் மற்றும் யூரோ நோட்டுகள் உடன் இலங்கை பணநோட்டுகளையும் சேர்த்து அறுபது லட்சம் பணத்துடன் குறித்த நபர் துபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்துள்ளார்.
அவரது பயணப் பையை சுங்கத்துறையினர் சோதனையிட்டபோது அதற்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் குறித்த தொகை பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லப்படவிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு இரண்டு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, மருதானையில் ஆட்டோ உதிரிப்பாகங்கள் இறக்குமதித் தொழில் செய்யும் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnqz.html
அமைச்சர் செந்தில் தொண்டமான் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபாடு?
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 03:49.15 PM GMT ]
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் சாய்தளப் பிரதேசங்களான மஸ்கெலிய, ஹட்டன், பொகவந்தலாவை, டயகம, நோர்வூட், ராகலை போன்ற பகுதிகளி்ல் அமைச்சரின் ஆதரவுடன் பாரிய மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சரின் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்விற்கு பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரிகளும், முக்கிய அரசியல்வாதிகளும் பின்புலத்தில் தொடர்புபட்டுள்ளனர்.
இதேபோன்று அமைச்சர் தொண்டமானின் ஆதரவாளர்கள் குழுவொன்று ஹோர்டன்தென்ன பிரதேசத்தில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளது.
அப்பகுதி அரசாங்கத்துக்குரிய பாதுகாக்கப்பட்ட வனாந்திரம் என்பதுடன், அமைச்சரின் ஆதரவாளர்கள் தவிர வேறு யாரும் அங்கு நுழைய முடியாதளவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நீர்மின் உற்பத்தி நிலையத்தின் நீர் ஆதார பிரதேசங்களில் இவ்வாறு அகழ்வுகள் நடப்பது நீர்மின்நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மவுஸ்ஸாகெலை, லக்ஷபான, விமலசுரேந்திர, கெனியோன், பொல்பிதிய போன்ற நீர் மின் உற்பத்தி நிலையங்கள் இதன் காரணமாக அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
இவர்களின் மாணிக்கக் கல் அகழ்வு குறித்து சம்பந்தப்பட் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகின்றது.
இது பாரிய சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்றும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnq1.html
எதிர்காலமற்ற சூனியவெளி அந்தரத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்கள்: அருண் தம்பிமுத்து
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 03:58.51 PM GMT ]
அம்பாறை மாவட்ட கிராமங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களின் எல்லைகள் மாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதியின் இணைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களின் அடையாளங்கள் மாறா வண்ணம் உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் அமையப்பெற வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடாக அறிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி சபைகளை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
அம்பாறை மாவட்ட கிராமங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களின் எல்லைகள் மாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது.
ஆலையடிவேம்பு, திருக்கோயில், நாவிதன்வெளி, காரைதீவு மற்றும் கல்முனைத் தமிழ்ப் பிரிவு ஆகிய இடங்களில் தமிழர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றார்கள்.
அதுமட்டுமின்றி தமிழர்கள் இன்று சிறுபான்மையாகக் காணப்படும் பொத்துவில் மற்றும் வீரமுனை போன்ற கிராமங்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களின் அடையாளங்கள் மாறாவண்ணம் உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் அமையப்பெற வேண்டும்.
தற்பொது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களின் எல்லைகளே உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளாகவும் அமையவேண்டும். தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதுடன், கல்முனை வடக்கு, ஒரு பிரதேச சபையாகவும் உருவாக வேண்டிய உரிமையை எவரும் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறிக்க முடியாது.
அம்பாறை மாவட்டத்தினுள் தொடரான நிலப்பரப்பினைக் கொண்ட நிருவாக அலகாகவோ உள்ளூராட்சி சபையாகவோதான் இருக்க வேண்டும் என்கிற தேவையும் கட்டாயமும் இல்லை.
மூவினத்தவருக்குமான ஒரே அலகாக இருந்த கோறளைப்பற்று பிரதேச செயலகம் பின்னர், முஸ்லிம்களுக்கென தனியாக கோறளைப்பற்று மத்தி எனவும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம் எனவும் தனித்தனியாக அமைக்கப்பட்டது.
வாழைச்சேனையையும் ரெதிதன்னையையும் உள்ளடக்கி கோறளைப்பற்று மத்தி என்ற பிரதேச செயலகம் அமைக்கமுடியுமாயின், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற கிராமங்களை உள்ளடக்கிய பிரதேச செயலகங்களோ அல்லது பிரதேச சபைகளோ உருவாவதை எவரும் எதிர்க்க வேண்டிய தேவையில்லை.
எனவே தமிழர்கள் வாழும் கிராமங்களை உள்ளடக்கிய பிரதேச செயலகங்கள் உருவாவதை முஸ்லிம் தலைவர்கள் எதிர்க்கக்கூடாது.
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மொழி ரீதியாக இருந்துவரும் உறவினைப்போலவே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே பல நூற்றாண்டு பழமையான கலாச்சார உறவு இருந்து வருகிறது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மூன்று சமூகத்தினரும், ஒருவருடைய கலாச்சாரத்தினையும் தனித்துவத்தினையும் மற்றைய சமூகத்தினர் மதித்து வாழ்வதன் மூலமே மூன்று சமூகத்தினரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் வாழ முடியும்.
கடந்த ஐம்பதுவருடங்களாக நடந்த, அரசியல் போராட்டமாகட்டும் ஆயுத போராட்டமாகட்டும் இரண்டையுமே எட்ட நின்று வேடிக்கை பார்க்காமல் முழுமையாக அதில் ஈடுபட்ட கிழக்கு மாகாணத் தமிழர்கள் அந்த போராட்டங்கள் கொடுத்த வெகுமதியாக இன்று முப்பத்துநான்கு விகிதம் என்கிற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இன்று கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்காலமற்ற சூனியவெளி அந்தரத்தில் பரிதவிக்கின்றார்கள்.
இந்த நிலையில் சொந்த அரசியல் ஆதாயங்களைத் தக்கவைக்கும் நோக்கில் எழுப்பப்படும் “சகோதரத்துவம்” “ஒருமைப்பாடு” “ஒத்துழைப்பு” போன்ற மூளைச்சலவைக் கோசங்களில் மயங்கி அழிந்துபோகாமல் நம்மைநாமே காத்துக்கொள்ள வேண்டியது கிழக்கு மாகாணத் தமிழர்கள் நம் எல்லோருடைய பொறுப்பும் கடமையுமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnq2.html

Geen opmerkingen:

Een reactie posten