தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் ஒரு லட்சம் பேருக்கு அடையாள அட்டை

முக்கிய அமைச்சர் ஒருவரை நீக்க தயாராகும் அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 08:17.26 AM GMT ]
களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
பொதுபல சேனாவுக்கு எதிராக செயற்பட்டு வரும் இந்த அமைச்சர் ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்தார்.
இவர் தற்போது எதிர்க்கட்சிகளுடன் நெருக்கமான செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சகல அமைச்சர்களுமே குறித்த அமைச்சருக்கு எதிராக பகிரங்க மேடைகளில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மைய காலமாக அரசாங்கத்தின் சில செயற்பாடுகளை விமர்சித்து வருவதுடன் பொதுபல சேனா அமைப்பை கடுமையாக எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARXKWex6.html
விமானப்படை முகாமில் சற்று முன்னர் மர்ம வெடிப்பு: மூவர் காயம்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 08:33.30 AM GMT ]
கல்பிட்டி அருகே உள்ள விமானப்படை முகாமொன்றில் சற்று முன்னர் மர்ம வெடி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
கல்பிட்டி கந்தல்காடு பகுதியில் அமைந்துள்ள விமானப்படை முகாமிலேயே குறித்த மர்ம வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிவிபத்தில் உடல் கருகிய நிலையில் காயமுற்ற மூன்று விமானப்படையினர் தற்போது கல்பிட்டி மற்றும் புத்தளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெடிவிபத்து நடைபெற்ற இடத்தைச் சுற்றிலும் இராணுவம் மற்றும் பொலிசாரினால் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் செய்தியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
கடற்படை தளபதி இந்தியா செல்வது உறுதி
தமிழகத்தின் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளபோதும் கடற்படை தளபதியின் இந்திய விஜயம் திட்டமிட்டப்படி இடம்பெறும் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா இன்று இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் அந்த பயணம் எதிர்வரும் 25ஆம் திகதியன்று இடம்பெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கை கடற்படையின் தளபதியின் பயணத்தை ரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது எனினும் இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் கடற்படை தளபதி இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொள்வார் என்று இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnoy.html
வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமைச்சர்: மாட்டிக் கொண்ட ஊடகவியலாளர்கள்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 08:40.01 AM GMT ]
தென்னை அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் மொனராகலையில் நேற்று இடம்பெற்றுள்ளது. மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர, உடவாடிய பிரதேசத்தின் மின்சார வழங்கல் திட்டத்தை திறந்து வைக்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார சென்றிருந்தார். குறித்த நிகழ்வில் செய்தி சேகரிக்க பெருமளவான ஊடகவியலாளர்களும் சென்றிருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் எதிர்பாராதவிதமாக கடும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அப்பகுதியைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து வெளியேற முடியாமல் சுமார் நான்கு மணித்தியாலங்கள் அப்பகுதிக்குள் சிக்கியிருந்தனர்.
அமைச்சர் ஜகத் புஷ்பகுமார சென்றிருந்த உடவாடிய பிரதேசம் மலைப்பகுதியின் உச்சியில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். சுற்றிலும் தாழ்மையான நிலப்பரப்பைக் கொண்டது. இதன்காரணமாக நேற்றைய வெள்ளத்தின் போது அப்பகுதியில் மண்சரிவும் ஏற்பட்டு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் விசேட பொலிஸ் அணியொன்றின் உதவியுடன் அமைச்சர் மற்றும் ஊடகவியலாளர்கள் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக தகவலகள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnoz.html
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் ஒரு லட்சம் பேருக்கு அடையாள அட்டை
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 08:50.48 AM GMT ]
தேசிய அடையாள அட்டை இல்லாத சுமார் ஒரு லட்சம் பேருக்கு அதனை வழங்க இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் நவம்பம் 30 ஆம் திகதிக்கு பின்னர் விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKXno0.html

Geen opmerkingen:

Een reactie posten