சற்று முன்னர் மத்தேகொட இராணுவ பொறியியல் படை தலைமையக வெடிபொருள் களஞ்சியத்தில், வெடிப்பை அடுத்து தீபரவியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. பாரிவெடிச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மத்தேகொட இராணுவ பொறியியல் படை தலைமையக வெடிபொருள் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பை அடுத்து, ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார் சற்று முன் தெரிவித்துள்ளார். இன்று ஏற்பட்ட இந்த வெடிப்புச் சம்பவத் அடுத்து தீ ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவரவென கோட்டே மற்றும் தெஹிவளை தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸாரும் இராணுவத்தினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.athirvu.com/newsdetail/1124.html
Geen opmerkingen:
Een reactie posten