தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

இரத்தினபுரி பெண் தன்னைத் தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக மனு தாக்கல்!

இரத்தினபுரியில் கடந்த வாரம் பொலிஸ்காரர் ஒருவரால் பொது இடம் ஒன்றில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான பெண் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் அவர் நீதிமன்றத்திலும் வழக்கை தாக்கல் செய்யவுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று அவர் தமது முறைப்பாட்டை பதிவுசெய்தார்.
இதேவேளை குறித்த பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி ஏற்கனவே பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
2ம் இணைப்பு
இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண், தன் மீதான தாக்குதலுக்கு எதிராக 50 கோடி ரூபாய் அபராதம் கேட்டு இன்று வியாழக்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தவிர, தன் மீதான தாக்குதலுக்கு எதிராக பொலிஸ் திணைக்களத்திடமிருந்து 5 கோடி ரூபாய் அபராதம் கேட்டு, இன்று முறைப்பாடொன்றையும் செய்யவுள்ளதாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfs3.html

Geen opmerkingen:

Een reactie posten