தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 oktober 2014

கடும்போக்குவாதத்திற்கு எதிராக இரண்டு கடும்போக்கு அமைப்புக்கள் உடன்படிக்கை?

ஜனாதிபதி தேர்தல், ஊழல் மோசடி மிக்கதாகவே அமையும்!- கரு ஜயசூரிய
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 12:00.02 AM GMT ]
எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ஊழல் மோசடி மிக்கதாகவே அமையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச ஜனாதிபதி தேர்தல் ஜனநாயக விரோதமானதும், ஊழல் மோசடிகள் நிறைந்தாகவும் அமைவதற்கான சாத்தியங்கள் தற்போதே தென்படத் தொடங்கியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பு பான்ஸ் பிளேசில் காரியாலயம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்தது.
இந்த நிகழ்வில் நாட்டின் உயர் பொறுப்புக்களை வகிக்கும் அமைச்சு செயலாளர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
இவர்களில் சிலர் நிர்வாக சேவை நியமனம் பெற்றுக்கொண்டவர்கள்.
நிர்வாக சேவை நியமனங்களைப் பெற்றுக்கொண்ட அரச அதிகாரிகள் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
பூரண அரசாங்கப் பொறிமுறைமையையும் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் மூலம் தெளிவாகின்றது.
இந்த நடவடிக்கைகள் குறித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டியது ஊடகங்களின் கடமையாகும்.
ஊடகவியலாளர்கள் இந்தப் பணிகளை சிறந்த முறையில் செய்வார்கள் என கருதுகின்றோம்.
உயர் பதவிகளை வகிக்கும் அரச அதிகாரிகள் எந்தவிதமான பயமோ சந்தேகமோ இன்றி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்ற தைரியத்தை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே வழங்கியுள்ளார்.
கடந்த மேல் மாகாணசபைத் தேர்தலின் போது ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த உதய கம்மன்பிலவின் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வில் கோத்தபாய பங்கேற்றார்.
இந்த நடவடிக்கையானது சட்டவிரோதமானது என நாட்டு மக்களும் தேர்தல் ஆணையாளரும் ஒப்புக்கொண்டனர்.
எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான ஓர் நிலையில் அரசியல் கட்சியொன்றின் பிரச்சார காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வில் எவ்வாறு அரச அதிகாரிகள் பங்கேற்க முடியும் என தேர்தல் ஆணையாளரிடம் கேள்வி எழுப்புகின்றோம்.
ஜனாதிபதி தேர்தல் நியாயமானதும் சுயாதீனமானதுமாக இருக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் என்ற ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க வேண்டுமாயின் ஜனாதிபதியும் ஒரே கோட்டிலிருந்து போட்டியை ஆரம்பிக்க வேண்டும், மாறாக கோட்டுக்கு முன்னால் இருந்து ஓடக் கூடாது என ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு குறுகிய கால இடைவெளியே கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கியமான தேர்தல் ஒன்றுக்கு போதியளவு அவகாசம் வழங்கப்படாமை சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVgw2.html
கடும்போக்குவாதத்திற்கு எதிராக இரண்டு கடும்போக்கு அமைப்புக்கள் உடன்படிக்கை?
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 12:14.51 AM GMT ]
கடும்போக்குவாதத்திற்கு எதிராக இரண்டு கடும்போக்குவாத அமைப்புக்கள் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்பாக கருதப்படும் பொதுபல சேனா அமைப்பும்,  மியன்மாரின் பௌத்த கடும்போக்குவாத அமைப்பான 969 அமைப்பும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
தீவிரவாதமற்ற அமைதியான ஓர் வலயமாக ஆசிய பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கில் பொதுபல சேனா அமைப்பும், 969 அமைப்பும் உடன்படி;ககையில் கைச்சாத்திட்டுள்ளன.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள 969 பௌத்த அமைப்பின் தலைவர் அசீன் விராது தேரரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கடும்போக்குவாதத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் சகல பௌத்த அமைப்புக்களையும்ää கடும்போக்குவாத நிலைப்பாட்டை கொண்டிராத இந்து முஸ்லிம் அமைப்புக்களையும் எதிர்காலத்தில் தமது அமைப்புக்களுடன் இணைத்துக்கொள்ளப் போவதாக பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVgw3.html

Geen opmerkingen:

Een reactie posten