மகனை வாளால் வெட்ட வந்தவர்களிடமிருந்து மகனை பாதுகாக்கச் சென்ற தந்தை வாள்வெட்டுக்கு இலக்காகிய சம்பவம் யாழ்ப்பாணம், கந்தோரடையில் புதன்கிழமை (22) இரவு இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் வியாழக்கிழமை (23) தெரிவித்தனர்.
இதில் படுகாயமடைந்த தேவராசா முரளிதரன் (வயது 39) என்பவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதியில் புதன்கிழமை (23) பகல் இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதலின் தொடர்ச்சியாக, நேற்று இரவு, கந்தோரடையில் வசிக்கும் இளைஞன் ஒருவரை வாளால் வெட்டுவதற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நால்வர், அவ்விளைஞனை வாளால் வெட்ட முற்பட்டுள்ளனர். இதன்போது, குறுக்கிட்ட குறித்த இளைஞனின் தந்தை மீது வாள் வெட்டு இடம்பெற்றதில் அவரது கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து, வாள் வெட்டை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.athirvu.com/newsdetail/1282.html
Geen opmerkingen:
Een reactie posten